)
AK 64 Ajith Kumar Pair Up With Sreeleela : தமிழ் திரையுலகின் டாப் நடிகராக விளங்குபவர், அஜித் குமார். இவர், தனது 64வது படத்தில் கமிட் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் அதில் நடிக்க இருக்கும் 2 கதாயாகிகள் குறித்த செய்தியும் வெளியாகி இருக்கிறது.
அஜித் 64:
2025ஆம் ஆண்டு, அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்த ஆண்டாக இருக்கிறது. முதலில் வெளியான விடாமுயற்சி படம் பெரிதாக ஹிட் ஆகவில்லை என்றாலும், அதற்கடுத்து வெளியான குட் பேட் அக்லி படம், நல்ல வெற்றியை தேடி தந்தது. சில மாதங்களுக்கு முன்பு அஜித் பத்மபூஷன் விருதையும் பெற்றார். இவரது ரேசிங் கார் அணி, தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் வெற்றியை குவித்து வருகிறது. பல ஆண்டுகளாக எந்த ஊடகத்திற்கும் பேட்டி கொடுக்காத அவர், தன்னைப்பற்றிய விஷயங்களை சமீப காலங்களாக வெளிப்படையாக பேசி வருகின்றார்.
அஜித்தின் 64வது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. குட் பேட் அக்லி வெற்றி பெற்றதால், திரும்பவும் அந்த படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று முன்னர் ஆதிக் குறிப்பிட்டிருந்தார். அஜித்தின் 64வது படத்தை, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பதாக கூறப்படுகிறது.
மிக இளம் வயது நாயகி?
அஜித்தின் 64வது படத்தில், 2 நாயகிகள் வருவதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் அஜித்தை விட வயதில் ரொம்ப சின்னவர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் வேறு யாருமில்லை, தெலுங்கு நடிகை ஸ்ரீலீலாதான். 2001ல் பிறந்த இவருக்கு, தற்போது 24 வயதாகிறது. ஆனால், அஜித்திற்கோ 54 வயதாகிறது. அஜித்தை விட, 30 வயது சின்ன பெண்ணான இவர், அவருக்கு ஜோடியாக படத்தில் நடித்தால் சரியாக இருக்குமா என்பது நெட்டிசன்களின் பேச்சாக இருக்கிறது. அதே நேரத்தில் இவர் ஜோடியாகத்தான் நடிக்கிறாரா என்பதும் இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை.
18 வயதிலேயே திரையுலகிற்கு வந்த ஸ்ரீலிலா, தெலுங்கில் மகேஷ் பாபு, பாலையா உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் நடித்து விட்டார். சமீபத்தில் புஷ்பா 2 படத்தில் இருந்த கிஸிக் பாடலில் நடனமாடியிருந்தார். அது மட்டுமன்றி, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார்.

இன்னொரு நாயகி?
அஜித் 64 படத்தில் இன்னொரு நாயகியும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. லப்பர் பந்து படத்தில் கெத்து தினேஷிற்கு ஜோடியாக நடித்திருந்த ஸ்வாசிகாதான் அந்த இன்னொரு நாயகி என்று கூறப்படுகிறது. இந்த படத்தை அடுத்து அவர் சூரி ஹீரோவாக நடித்திருந்த ‘மாமன்’ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இவர், ஜனநாயகன் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்போது அஜித் என்ன செய்கிறார்?
நடிகர் அஜித், இப்போது தனது கார் ரேஸிங்கில் கெரியரில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில், தன் குடும்பத்தினரோடும் நேரத்தினை செலவிட்டு வருகிறார். இவரது வேலை அனைத்தும் முடிந்த பிறகு, பட வேலைகள் தாெடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ