AK 64 Movie Director : அஜித்குமார், தனது 64வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்க இருப்பவர் யார் என்பது குறித்த போட்டி தற்போது நிலவி வருகிறது.

AK 64 Movie Director : கோலிவுட்டின் முன்னணி நடிகராக விளங்கி வரும் அஜித், விரைவில் தனது 64வது படத்தில் சைன் செய்ய இருக்கிறார். ஆனால், இப்போது வரை இந்த படத்தின் இயக்குநர் யார் என்ற விவரம்தான் தெரியவில்லை.
அடுத்த இயக்குநர் யார்?
விஜய், அடுத்த ஆண்டில் அரசியலில் களமிறங்கப்போவதை தொடர்ந்து, அவரை வைத்து படம் எடுக்க திட்டமிட்டு இருந்தவர்கள், இப்போது அஜித்தை நாேக்கி கல்லெறிய ஆரம்பித்து இருக்கின்றனர். அப்படி, அஜித்தின் 64வது படத்தை இயக்க இருப்பது யார் என்பது குறித்த கேள்விகள் நிலவி வருகிறது. இந்த நிலையில், அப்படி அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்புள்ள 4 இயக்குநர்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
யார் அந்த 4 பேர்?
பிரசாந்த் நீல்: அஜித்தும், கே.ஜி.எஃப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீலும் ஒரு படத்தில் இணைய இருப்பதாக கூறப்பட்டது. இவர்கள் இருவரும் சந்தித்து ஒரு கதை குறித்து பேசியதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் கசிந்தன. அதன் பிறகு, இருவரும் சந்தித்தது உண்மைதான் என்றும், ஆனால் படம் குறித்து எதுவும் பேசவில்லை என அஜித் தரப்பில் இருந்து கூறப்பட்டது. இருப்பினும், இருவரும் ஒரு படத்தில் ஒன்றிணைவார்களா என ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
சிவா: அஜித்தை வைத்து 3 படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. இவர், கங்குவா படத்தை முடித்தவுடன், அஜித்திடம் சென்று ஒரு கதையை சொன்னதாகவும் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் கூட்டணி வைப்பதாக கூறப்பட்டது. ஆனால், கங்குவாவின் தோல்விக்கு பிறகு சிறுத்தை சிவா வெளியில் தலை காட்டவே இல்லை.
வெங்கட் பிரபு: அஜித்தின் கெரியர் பெஸ்ட் ஆன ‘மங்காத்தா’ படத்தை இயக்கியவர் வெங்கட் பிரபு. இவர், கோட் படப்பிடிப்பின் போது அஜித்தை அஜர்பைஜானில் சந்தித்தது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், இவர்கள் இருவரும் படத்தில் இணைந்து பணிபுரிவார்களா என்பது தெரியவில்லை.
கார்த்திக் சுப்புராஜ்: பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என பல ஹிட் படங்களை கொடுத்திருக்கும் கார்த்திக் சுப்புராஜ்ஜும் இந்த லிஸ்டில் இருக்கிறார். இவர், சூர்யாவை வைத்து ரெட்ரோ படத்தை இயக்கியிருக்கும் நிலையில், அடுத்து அஜித்திற்கு ஏற்ற ஒரு கதையை வைத்து அவருக்காக ஒரு படத்தை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 வருடத்தில் 2 படங்கள்!
நடிகர் அஜித்குமார், துணிவு படத்திற்கு பிறகு கமிட் ஆன விடாமுயற்சி திரைப்படம் பல மாதங்களாக படப்பிடிப்பு பணிகளில் இருந்தது. மகிழ் திருமேனி இயக்கிய இந்த படம், கடைசியில் இந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி வெளியானது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்த படம், ரசிகர்கள் மத்தியில் சரியாக வரவேற்பை பெறவில்லை.
விடாமுயற்சி படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே, அஜித் சைன் செய்த இன்னொரு படம் குட் பேட் அக்லி. முந்தைய படம் போல இல்லாமல் இந்த படத்தின் பணிகள் வேகமாக நடக்க ஆரம்பித்தன. சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட 5 மாத இடைவேளையில் முடிக்கப்பட்டது. படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், இந்த ஆண்டு மே மாத்திற்குள் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பட வேலைகள் நடந்து வந்த சமயங்களிலும், அதற்கிடையே பைக் டூர், கார் ரேஸ் என பிசியாக இருந்தார் அஜித்குமார். 2025-ல்தான், பல ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் 2 படங்கள் ஒரே ஆண்டில் வெளியாகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ