அனைத்து பெண்களும் பாலியல் துன்புறுத்தல் குறித்து கூற வேண்டும் -அமலாபால்

எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது அதனை நான் முன்வந்து வெளியில் சொன்னேன், அதைப்போல் எல்லாப் பெண்களும் சொல்ல முன் வர வேண்டும் என அமலாபால் அறிவுறுத்தல்...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 13, 2018, 05:12 PM IST
அனைத்து பெண்களும் பாலியல் துன்புறுத்தல் குறித்து கூற வேண்டும் -அமலாபால் title=

எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது அதனை நான் முன்வந்து வெளியில் சொன்னேன், அதைப்போல் எல்லாப் பெண்களும் சொல்ல முன் வர வேண்டும் என அமலாபால் அறிவுறுத்தல்...! 

பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள், சமூக வலைதளங்களில் #MeToo இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர். திரையுல பிரபலங்கள் தொடங்கி, பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.

ற்போது தமிழக திரையுலக பிரபலங்கள் மீதும் #MeToo ஹாஸ்டேக் பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை புகார்கள் பதியப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் பாடகி சின்மயி பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகாரினை பதிவு செய்தார். தனக்கு 17 வயது இருக்கும் போது வைரமுத்து அலுவலகத்திற்கு தான் சென்று இருந்ததாகவும் அப்போது வைரமுத்து தன்னை கட்டி அணைத்து தவறாக நடக்க முயன்றதாகவும் சின்மயி புகார் கூறி இருந்தார். இதற்க்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், #MeToo விவகாரம் குறித்து பலரும் தங்களின் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து நடிகை அமலா பால் அமலாபால் #MeToo விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து வர கூறியுள்ளதாவது, சமூக வலைதளங்கள் மூலம் நிகழும் Metoo மிக முக்கியமானது. எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது அதனை நான் முன்வந்து வெளியில் சொன்னேன், அதைப்போல் எல்லாப் பெண்களும் சொல்ல முன் வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

Trending News