ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார். இந்த எபிக் கதாபாத்திரம் இன்னும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாததாக மாறி உள்ளது. 'புஷ்பா 2' திரைப்படம் ரூ. 1800 கோடி பாக்ஸ் ஆபீஸில் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் இந்தி வெர்ஷன் சமீபத்தில் தொலைக்காட்சியில் பிரீமியர் ஆனது. நடிகர் அல்லு அர்ஜூனின் இந்த மாஸிவ் கதாபாத்திரத்தை இந்தி பேசும் ரசிகர்களும் கொண்டாடினர். இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'புஷ்பா2' திரைப்படம், 5.1 TVR ரேட்டிங் மற்றும் 5.4 கோடி பார்வைகளைப் பெற்று, ந்த வருடத்தின் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
#Pushpa2 reaches a massive 5.4 Crore Views among Hindi TV audiences… #AlluArjun beats Giants #AlluArjun #Pushpa2HighestTVRinHindi
Icon Star @alluarjun @Archanakalpathi @iamRashmika @aryasukku #FahadhFaasil @ThisIsDSP @resulp @NavinNooli @SukumarWritings @MythriOfficial… pic.twitter.com/aKn2xbbFCD
— Done Channel (@DoneChannel1) June 21, 2025
மேலும் படிக்க | அரசியலுக்கு வரும் முன்பே..அரசியல் பேசிய விஜய்யின் பாடல்கள்! அத்தனையும் சூப்பர் ஹிட்
'ஸ்ட்ரீ 2', 'பதான்', 'அனிமல்' மற்றும் பல பிளாக் பஸ்டர் படங்களின் ரெக்கார்டையும் இது உடைத்துள்ளது. இந்த நம்பரையும் தாண்டி, படத்தின் எமோஷனல் தருணங்கள் தான் ஆடியன்ஸை கனெக்ட் செய்திருக்கிறது. பாலிவுட் ஜெயண்ட்ஸை தாண்டி புஷ்பா ராஜாக அல்லு அர்ஜூனை பெரிய திரையிலும் சின்னத்திரையிலும் கொண்டாடி வருகின்றனர். இந்த சாதனை நடிகர் அல்லு அர்ஜூனின் சினிமா பயணத்தில் மற்றொரு மைல்கல். தேசிய விருது பெற்றதில் இருந்து பான் இந்தியா ஸ்டாராக உருவானது என தன்னுடைய ஒவ்வொரு வெற்றியிலும் அடுத்தடுத்து உயரத்தை அடைந்து வருகிறார் நடிகர் அல்லு அர்ஜூன்.
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன்
புஷ்பா படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் தனது 22 ஆவது படத்தில் நடிக்கிறார் அல்லு அர்ஜுன். அமெரிக்காவில் டெஸ்ட் சூட் நடைபெற்ற நிலையில், படம் சயின்ஸ் பிக்ஸனாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இன்னும் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகாத நிலையில் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை 500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கியுள்ளது. அல்லு அர்ஜுன் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்றும் டைம் டிராவல் பற்றிய படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் தீபிகா படுகோனே, மிருனாள் தாகூர், ஜான்வி கபூர் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | தக் லைஃப் படத்தால் லாபமடைந்த ஒரே ஆள்! கமல், மணிரத்னம் இல்லை-யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









