Rajkumar Periasamy Next Hero : அமரன் படம் மூலம் பெரிய இயக்குநராக மாறியவர், ராஜ்குமார் பெரியசாமி. இவரது அடுத்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா?

Rajkumar Periasamy Next Hero : கடந்த 2024ஆம் ஆண்டில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்த படங்களுள் ஒன்றாக அமைந்தது, அமரன். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ‘மேஜர் முகுந்த்’ கதாப்பாத்திரத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.
யார் இந்த ராஜ்குமார் பெரியசாமி?
ரங்கூன் படத்தை இயக்கி, தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர், ராஜ்குமார் பெரியசாமி. பிரபல தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை இயக்கியிருக்கும் இவர், இப்போது கோலிவுட் திரையுலகின் முக்கிய இயக்குநர்களுள் ஒருவர். அமரன் திரைப்படத்திற்கு பிறகு, இவரை நோக்கி நாயகர்கள் பலர் தனது படத்தை இயக்குமாறு கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
அடுத்த படம்..
ராஜ்குமார் பெரியசாமி, அமரன் திரைப்படம் மூலம் பெரிய ஹிட் கொடுத்து விட்டார். அந்த படமும், சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் உலகளவில் வசூலித்து தயாரிப்பாளர் கமல்ஹாசனை குஷிப்படுத்தியது. இந்த நிலையில், அவர் அடுத்து ஒரு பெரிய ஹீரோவை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிலும், அது ஏதோ ஒரு நடிகர் எல்லாம் கிடையாது. இந்திய திரையுலகிலேயே பெரிய நடிகர்..
யார் அவர்?
தற்போது தமிழ் திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சிக்கந்தர் படத்தின் ஹீரோ சல்மான்கான்தான் அந்த ஹீரோ. இவர்கள் இருவரும் வெகு விரைவிலேயே ஒரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் சமீபத்தில் ஒன்றாக சந்தித்து பேசியதாகவும், இது கதை டிஸ்கஷன் குறித்த சந்திப்பாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது, கமர்ஷியல் ஹிட் கொடுக்கும் இயக்குநர் எந்த மொழியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு இந்தி நடிகர்கள் ஓகே சொல்லி வருகின்றனர். ஷாருக்கான் ஜவான் படத்தை அடுத்து இன்னொரு தென்னிந்திய இயக்குநர் சுகுமாருடன் கைக்கோர்த்துள்ளது போல, சல்மான் கானும் இப்படியொரு முடிவை எடுத்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

தனுஷுடன் ஒரு படம்…
ராஜ்குமார் பெரியசாமி, அமரன் படத்தை முடித்த கையோடு தனுஷ் உடன் ஒரு திரைப்படத்தில் கமிட் ஆனார். இந்த படத்தில் இது தனுஷின் 55வது திரைப்படம் ஆகும். இந்த படத்தின் பூஜை கடந்த நவம்பர் மாதம் நடந்தது. இதையடுத்து, இதற்கான பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் பணிகளில் படக்குழுவினர் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனராம். இந்த படத்திற்கு பிறகு, சல்மான் கானுடனான படம் பற்றி ராஜ்குமார் பெரியசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ