சினிமா நட்சத்திரங்கள் பொது வெளியில் வரும்பொழுது அவர்களை பார்க்க எப்போதும் மக்கள் கூட்டம் அலை மோதும். குறிப்பாக பாலிவுட் திரை உலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் இதனை நிறைய முறை அனுபவித்திருப்பார்கள். மக்களின் அளவுக்கதிகமான பாசத்தில் நட்சத்திரங்களின் அருகில் நின்று கை கொடுக்கவும்,போட்டோ எடுக்கவும் முயற்சிப்பார்கள். ரசிகர்களிடமிருந்து நட்சத்திரங்களை பாதுகாப்பது செக்யூரிட்டி (Security) என்று சொல்லப்படும் பாடிகார்ட்ஸ் (Body guard). பாடிகார்ட்ஸ்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
அமிதாப்பச்சனின் பர்சனல் பாடிகார்ட் (Body guard) ஆன ஜிதேந்திர சிந்தே (Jitendra shinde) விற்கு வருடத்திற்கு 1.5 கோடி சம்பளம் பெற்று வருகிறார். பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனை பாதுகாப்பது மிகப்பெரிய விஷயம், அதனாலேயே இவ்வளவு ஊதியம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அமிதாப் பச்சன் இந்தியா அல்லது வெளிநாடு என எங்கு சென்றாலும் அவரது நிழல் போலவே ஜிதேந்திரா காணப்படுகிறார்.
ALSO READ தளபதி 66-ல் இணையும் ஜோக்கர் பட புகழ் ராஜூமுருகன்!
அமிதாப்பச்சனின் பாடிகார்ட் (Body guards) ஆன ஜிதேந்திரா தனியாக ஒரு செக்யூரிட்டி ஏஜென்சி நடத்துகிறார். பல முன்னணி நட்சத்திரங்களுக்கும் பாதுகாப்பு வீரராக செல்கிறார். பிரபல அமெரிக்க நடிகரும் தயாரிப்பாளருமான எலிஜா வுட் (Elijah wood) இந்தியாவிற்கு சுற்றுலா வந்த போது ஜிதேந்திரா (Jitendra shinde) தான் பாதுகாப்பு வழங்கினார். அமிதாப்பச்சனின் வேண்டுகோளுக்கிணங்க எலிஜா வுட்டுக்கு (Elijah wood) பாதுகாப்பு வழங்கியுள்ளார். அமிதாப்பச்சனை போன்ற அனைத்து அனுஷ்கா சர்மா, தீபிகா படுகோனே, ஷாருக்கான், சல்மான்கான் போன்றவர்களும் தங்களது பாதுகாப்பு வீரர்களுக்கு மிகப் பெரிய தொகையை சம்பளமாக வழங்கி வருகின்றனர்.
அமிதாப்பச்சன் நடிப்பில் உருவாகியுள்ள சேரே படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இப்படத்தினை ரம்மி ஜாப்ரி இயக்கியுள்ளார். கடந்த வருடம் அமிதாப்பச்சன் நடிப்பில் குலாபோ சித்தாபோ படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இன்று நடிகர் பார்த்திபன் இயக்கும் இரவின் நிழல் படத்தின் போஸ்டரை வெளியிடுகிறார் அமிதாப்பச்சன். அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை வைத்து ஒத்த செருப்பு படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார் பார்த்திபன்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYe