ரோபோ சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள அம்பி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி ஐஸ்வர்யா தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது பத்திரிகையாளர் கேட்ட ஒரு கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வெயில் காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக ஐஸ்வர்யா பேசிக் கொண்டது நிலையில், நீங்கள் அணிந்திருக்கும் ஆடை வெயிலுக்கு ஏற்றதா என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த தொகுப்பாளனி ஐஸ்வர்யா, இது இந்த டாபிக்கிற்கு தேவையில்லாத விஷயம் என்று நினைக்கிறேன். எனவே இந்த கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது என்று தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க | மாமன் vs டிடி நெக்ஸ்ட் லெவல்: பாக்ஸ் ஆபிஸில் யாரு ராஜா? எந்த படத்திற்கு வரவேற்பு
இந்த நிகழ்ச்சி முடிந்த பின்பு இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். இந்த சர்ச்சை தொடர்பாக தொகுப்பாளினி ஐஸ்வர்யாவிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளர், தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தொகுப்பாளினி ஐஸ்வர்யா வெயில் தொடர்பாக பல டிப்ஸ்களை கொடுத்தார், அதனால் தான் இது போன்ற கேள்வியை கேட்டேன் என்று விளக்கம் அளித்து இருந்தார். இருப்பினும் இந்த விவகாரம் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற யோகிடா படத்தின் விழாவை தொகுத்து வழங்கிய ஐஸ்வர்யா ஆடை விவகாரம் குறித்து பேசி உள்ளார். "சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளர் என்ன நோக்கத்தில் அந்த கேள்வியை கேட்டார் என்பது எனக்கு அப்போதே புரிந்தது. ஆனால் அதற்கு பதில் சொல்வதா அல்லது மேடை நாகரீகம் கருதி கடந்து செல்வதா என்ற குழப்பத்தில் இருந்தே. அதனால் அப்போது நான் எந்த பதிலும் சொல்லவில்லை. நிகழ்ச்சி முடிந்த பிறகு அவரை தேடினேன். ஆனால் அவரை பார்க்க முடியவில்லை. ஆனால் மக்கள் இதற்கு சரியான கேள்வியை உங்களிடம் கேட்டனர். தான் செய்தது தவறு என்று அவர் உணர்ந்தால் போதும்.
இதற்கு ஆரம்பப் புள்ளியாக ஒரு நடிகர் என் கழுத்தில் மாலை போட வந்தார். அப்போதே அதை நான் கண்டித்து புகார் அளித்திருக்க வேண்டும் அல்லது மேடையிலேயே அவரை அடித்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை, இதனால் என்னை பலவீனமானவள் என்று அனைவரும் நினைக்கின்றனர். ஆண்கள் உங்கள் பலத்தை என்னிடம் காட்ட நினைக்கின்றனர். என் வாழ்க்கையில் சில நல்ல நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. எனவே அதில் நான் ஃபோக்கஸ் செய்யப் போகிறேன்" என்று தெரிவித்துள்ளார். கடத்த ஆண்டு நடைபெற்ற ஒரு சினிமா நிகழ்ச்சியில் நடிகர் கூல் சுரேஷ் தொகுப்பாளினி ஐஸ்வர்யாவின் மீது மாலை ஒன்றை போட்டார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
how fcking sick of media !! #anchoraishwarya pic.twitter.com/TQDC8koZ6k
—(@bharrr) May 19, 2025
மேலும் படிக்க | த.வெ.க-வில் இணைவாரா சூரி? அவர் கொடுத்த நக்கலான பதில்! வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ