)
Manimegalai Hussain Ayyappan Temple : தமிழ் சின்னத்திரையுலகில் பிரபல தொகுப்பாளராக இருக்கிறார் மணிமேகலை. இவரை தெரியாத இளசுகளை இல்லை எனும் அளவிற்கு படபடவென பட்டாசு போல பேசுபவர் இவர். இவரது சமீபத்திய பதிவுதான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
மணிமேகலை-ஹுசைன் ஜோடி:
தொகுப்பாளராக இருக்கும் மணிமேகலை, கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கிறார். தனியார் இசை தொலைக்காட்சி ஒன்றில் வேலை பார்த்து வந்த இவர், வெற்றிகரமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த சமயத்தில்தான், இவருக்கும் சினிமாவில் நடனக்கலைஞராக இருக்கும் ஹுசைனுக்கும் காதல் மலர்ந்தது.
மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் வரும் ‘ஆடலுடன் பாடலை கேட்டு’ பாடலில் பேக் கிரவுண்டில் ஆடும் ஹுசன் மீது க்ரஷ் கொண்ட இவர், பின்னர் அவரை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து பேசி, அப்படியே காதலை வளர்த்ததாகவும் சில மேடை நிகழ்ச்சிகளில் கூறியிருக்கிறார்.
மணிமேகலையும் ஹுசைனும் வெவ்வேறு மதத்தினை சேர்ந்தவர்கள் என்பதால், இதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டில் தனது தந்தையை சம்மதிக்க வைக்க முடியாததால், திடீரென ஹுசைனை பதிவு திருமணம் செய்து கொண்டதாக மணிமேகலை பதிவிட்டிருந்தார். அதிலிருந்து, இருவரும் ஒன்றாக மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
மாலை போட்டு..மலைக்கு சென்ற ஹுசைன்:
மணிமேகலை, தனது இன்ஸ்டா பக்கத்தில் சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அதில் ஹுசைன் க்ளீன் ஷேவ் செய்து கொண்டு, நெற்றியில் சந்தனம் வைத்துக்கொண்டு, கழுத்தில் மாலைப்போட்டுக்கொண்டு மலைக்கு செல்வது போன்ற புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. கேப்ஷனில் “சுவாமியே சரணம் ஐயப்பா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பார்த்த மணிமேகலை ரசிரக்கள், “எம்மதமும் சம்மதம்” என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலர், இவர் இப்படி செய்வதை பார்க்கும் போது தங்களுக்கு மிகவும் பெருமையாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை!
மணிமேகலை, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2வது சிசனில் கோமாளியாக அறிமுகமானார். இவரை தொகுப்பாளராக மட்டும் பார்த்த பலருக்கு, இந்த முகம் வித்தியாசமானதாக தெரிந்தது. இருப்பினும், இதற்கும் ஒரு எண்ட் கார்ட் வந்தது. கடந்த 5வது சீசனில், இவர் தொகுப்பாளராக நுழைந்தார். அப்போது, போட்டியாளராக இருந்த பிரியங்காவிற்கும் இவருக்கும் முட்டிக்கொண்டது. இந்த பிரச்சனையில், ரசிகர்கள் மணிமேகலைக்கு ஆதரவு தெரிவிக்க, குக் வித் கோமாளி பிரபலங்கள் பிரியங்காவிற்கு ஆதரவளித்தனர். இதனால், இந்த பிரச்சனை பெரிதாக வளர்ந்தது.
இப்போது மணிமேகலை, வேறு ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கிறார். அங்கு அவருக்கு பயங்கர வைவேற்பு கிடைத்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ