Sandeep Reddy Vanga Statement About IAS Receives Backlash : கடந்த ஆண்டு வெளியாகி, பெரிய ஹிட் அடித்த படங்களுள் ஒன்று, அனிமல். ரன்பீர் கபூர் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பிரதீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். இந்த படம், பலவித சர்ச்சைகளுக்கு உள்ளான நிலையில், அவர் தற்போது பேசியிருக்கும் ஒரு விஷயமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சையை கிளப்பிய அனிமல் படம்:
கடந்த ஆண்டு அதிக ட்ரெண்டிங்கில் இருந்த படங்களில் ஒன்று, அனிமல். இது ட்ரெண்டிங்கில் இருக்க காரணம் சர்ச்சைக்குரிய பல விஷயங்கள் இந்த படத்தில் இருந்ததுதான் என கூறப்படுகிறது. ரன்பீர் கபூர், அணில் கபூர், பாபி டியோல், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருந்தது. பெரிய தொழிலதிபருக்கும் அவரது மகனுக்கும் இடையே இருக்கும் உறவுதான் படத்தின் மையக்கருவாக இருந்தது.
ஹீரோ கேரக்டர் ஆன ரன்விஜய், படத்தில் செய்த விஷயங்கள் முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருந்ததாக பலர் விமர்சனங்களை எழுதினர். இருப்பினும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிய இந்த படம் உலக அளவில் சுமார் ரூ.905 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்து அதன் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா பேசிய விஷயங்களும் சர்ச்சையை கிளப்பியது.
படத்தை விமர்சித்த ஐஏஎஸ் அதிகாரி:
கடந்த ஆண்டு அனிமல் படம் குறித்து பேசிய ஒரு ஐஏஎஸ் அதிகாரி, இது போன்ற படங்கள் நம் நாட்டை 10 வருடங்கள் பின்னோக்கி இழுத்து செல்வதாக விமர்சித்திருந்தார். மேலும் இது போன்ற படங்கள் வாங்கிக்கொண்டு படம் எடுப்பவர்கள், சமூகத்திற்கு தேவையான கதைகளை அதில் சொல்வதில்லை என்றும் கூறியிருந்தார்.
ஐஏஎஸ் ஆவது ஈசி..
சமீபத்தில், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அதில், மேற்கூறிய ஐஏஎஸ் இயக்குநர் தன் படத்தை குறை கூறியது குறித்து பேசியிருக்கிறார்.
Give 2-3 years of your life and read 1500 books, you can crack IAS.
I can give it in writing that there is no course and no teacher who can make you a successful director.
- Sandeep Reddy Vanga
— idlebrain jeevi (@idlebrainjeevi) March 3, 2025
“ஒரு ஐஏஎஸ் அதிகாரி, அனிமல் போன்ற படங்களை எடுக்க கூடாது என்றுகூறியிருந்தார். அதை கேட்கும் போது நான் என்னவோ பெரிய தவறு இழைத்து விட்டது போல எனக்கு தோன்றியது. காரணமே இல்லாமல் யாராவது பர்சனல் அட்டாக் செய்தால் கோபம் வரும். அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி, படித்துதான் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.
நான் என்ன நினைக்கிறேன் என்றால், டெல்லிக்கு போய் ஒரு கல்வி நிலையத்தில் சேர்ந்து படித்தால், 2-3 வருடத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஆகிவிடலாம். அதில் படிப்பதற்கும் குறைவான புத்தகங்கள்தான் இருக்கிறது. ஒரு 1500 புத்தகங்கள் படித்தால் ஐஏஎஸ் ஆகிவிடலாம். ஆனால், படம் எடுப்பதற்கோ, கதை எழுதுவதற்கோ அப்படிப்பட்ட ஒரு கோர்ஸும் இல்லை” என்று கூறியிருக்கிறார். சந்தீப், இப்படி பேசியிருப்பது, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்படம் எடுக்க கோர்ஸ் இல்லையா?
சந்தீப் இப்படி பேசியிருப்பது குறித்து இணையத்தில் சூடான விவாதங்கள் எழுந்துள்ளது. திரைப்பட பயிற்சி எதுவும் இல்லை என்று இவர் கூறியிருப்பதற்கு முரண் கருத்துகளும் எழுந்துள்ளது. காரணம், சென்னை உள்பட இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ஸ் இயங்கி வருகின்றன. இப்போது பிரபலமாக இருக்கும் பல இயக்குநர்களும், நடிகர்களும் அதிலிருந்து வந்தவர்களாக இருக்கின்றனர். சந்தீப்பின் பேச்சு, அரசு அதிகாரிகள் பலரின் கண்டனங்களுக்கும் உள்ளாகி வருகிறது.
மேலும் படிக்க | ஹாலிவுட்டுக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார் இயக்குனர் சந்தீப் ரெட்டி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









