)
தமிழ் சினிமாவில் பெஸ்ட் இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து இவர் படம் இயக்கியுள்ளார். தற்போது சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ள ஏ.ஆர். முருகதாஸ் எஸ்.கே. 23 படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்படிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏ.ஆர். முருகதாஸின் திரையலக ஆரம்பப்புள்ளி தீனா திரைப்படம் தான். அஜித் - சுரேஷ் கோபி நடிப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இரண்டாவது திரைப்படம் இது. இந்த படத்தில் விஜயகாந்துடன் இணைந்து சிம்ரன், விஜயன், யுகி சேது, அஷிமா பாலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவான சிறப்பான தரமான திரைப்படம் கஜினி. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து அசின், நயன்தாரா, பிரதீப் ராம் சிங் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர். முருகதாஸ் விஜய் முதல் முறையாக கூட்டணி அமைத்தது இப்படம் மூலம் தான். ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. அதேபோல் 7ஆம் அறிவு போதிதர்மரை வித்தியாசமான கதைக்களத்தை உருவாக்கி சூர்யாவிற்கு மாபெரும் வெற்றியை தேடி கொடுத்தார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.
ஏ.ஆர். முருகதாஸின் திரைப்படங்களில் ஒன்று கத்தி. இந்த படத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தார். மேலும் இப்படமும் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. எனினும் விஜய்யுடன் மூன்றாவதாக இணைந்த சர்கார் அடிவாங்கியது. தொடர்ந்து முருகதாஸ் இயக்கும் படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றன. அதில் ரஜினியின் தர்பாரும் அடக்கம்.
முருகதாஸ் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி படத்தை இயக்கிவருகிறார். சமீபத்தில்தான் சென்னை எல்ஐசி கட்டடம் இருக்கும் பகுதியில் பாடலுக்கான படப்பிடிப்பு நடந்தது. வரிசையாக தன்னை தொடர்ந்துகொண்டிருக்கும் தோல்விகளுக்கு இந்தப் படத்தின் மூலம் பதிலடி தர காத்திருக்கிறார் என அவரது ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகி வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் தனது மகள் மற்றும் மகனுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
@ARMurugadoss dancing and vibing to the #kanimaa song along with their family @Suriya_offl @karthiksubbaraj @Music_Santhosh @Lyricist_Vivek @stonebenchers #Retro pic.twitter.com/noAtWvQBli
— Ap Arun Suriya (@ApArunSuriya) June 16, 2025
Proud to serve for a cinematic legend!
— Madhampatty Rangaraj (@MadhampattyRR) June 16, 2025
Madhampatty Rangaraj Catering at the family function of the one and only AR Murugadoss sir – a true icon of both Bollywood and Kollywood.#ARMurugadoss #madhampattyrangaraj #madhampattypakashala #madhampattyvirundhu #madhampatty pic.twitter.com/RpNM9cVsrK
கள்ளக்குறிச்சியை சொந்த ஊராகக் கொண்ட பிரபல திரைப்பட இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மகள் ஹர்ஷிதாவின் மஞ்சள் நீராட்டு விழா கள்ளக்குறிச்சியில் உள்ள பிரபல தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் முருகதாஸின் உறவினர்கள் மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த அவரது நண்பர்கள் குடும்பத்தினர் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஏ ஆர் முருகதாஸ் தனது மகள் ஹர்ஷிதா மற்றும் மகன் ஆதித்யா ஆகிய இருவருடனும் சேர்ந்து மேடையில் உற்சாகமாக நடனமாடிய கட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கைத்தட்டி உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ