இளம் நட்சத்திர நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென், மற்றும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் புதிய ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இனிதே தொடங்கியது.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் (Power House Pictures) #ProductionNo1 சார்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி, இயக்க, இப்படம் ஒரு புதுமையான களத்தில், அனைத்து ரசிகர்களையும் கவரும் வகையில் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாக உள்ளது.
New Project - Arjun Das Anna Ben Yogi Babu
This line-up = Pure POWER!
Power House Pictures' #ProductionNo1 has all our attention! pic.twitter.com/hw258iw1FF
— Studio Flicks (@StudioFlicks) December 10, 2025
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அர்ஜுன் தாஸ், முன்னணி நடிகை அன்னா பென், நகைச்சுவையில் கலக்கி வரும் யோகிபாபு மற்றும் மூத்த நடிகை வடிவுக்கரசி ஆகிய நால்வரும் இப்படத்தின் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நான்கு கதாபாத்திரங்களைச் சுற்றியே படத்தின் மொத்த கதையும் பின்னப்பட்டுள்ளது.
படத்தின் பூஜையைத் தொடர்ந்து, சென்னை, மங்களூர், மும்பை ஆகிய இடங்களில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
தொடர் வெற்றிப் பாடல்களைத் தந்து வரும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்
தயாரிப்பு: பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்
இசை: ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டிங்: அருள் மோசஸ்.A
கலை இயக்கம்: ராஜ் கமல்
உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்
ஸ்டண்ட்: Action சந்தோஷ்
மக்கள் தொடர்பு: யுவராஜ்
படத்தின் தலைப்பு மற்றும் மற்ற கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
மேலும் படிக்க | காதல் தோல்விக்கு பிறகு மரண கம்-பேக் கொடுத்த கோலிவுட் பிரபலங்கள்!!
மேலும் படிக்க | ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் Cancel.. போஸ்ட் எல்லாமே டெலீட்! என்ன காரணம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









