பொங்கல் கொண்டாட்டத்துடன் படப்பிடிப்பை நிறைவு செய்த 'அறுவடை' படக்குழு!

'லாரா' திரைப்படத்தைத் தொடர்ந்து எம். கே .ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படைப்பு 'அறுவடை'  திரைப்படம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 20, 2026, 03:45 PM IST
பொங்கல் கொண்டாட்டத்துடன் படப்பிடிப்பை நிறைவு செய்த 'அறுவடை' படக்குழு!

இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த 'அறுவடை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்.கார்த்திகேசன் நடிக்க, அவருடன் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார் .மேலும் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் நடிக்கிறார்கள். ஆனந்த், ஒளிப்பதிவு -ரகு ஸ்ரவண் குமார், இசை, படத்தொகுப்பு - கே .கே . விக்னேஷ். பாடல்கள் - கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி. கிராமியப் பின்னணியிலான கமர்சியல் படமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தை எம் கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இயக்குநர் எம். கார்த்திகேசன் தயாரிக்கிறார்.

Add Zee News as a Preferred Source

கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாகும் 'அறுவடை' படத்தின் சார்பில் கோயம்புத்தூரில் பொங்கல் விழா கொண்டாடிப் படப்பிடிப்பை முடித்துள்ளனர்.

அறுவடைத் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் திருநாளில் பொங்கல் விழா கொண்டாடி 'அறுவடை' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் நடைபெறும் ஒரு சிறிய பிரச்சினை, மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து சமூகத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்ற ஒரு தத்துவத்தை மையப்படுத்தி இப்படத்திற்கு 'அறுவடை' என பெயரிட்டிருக்கிறோம். விரைவில் படத்தை வெளியிட உள்ளோம் " என்றார்.

மேலும் படிக்க | நடுகடலில் வைப் செய்யும் நயன்தாரா - த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்!

மேலும் படிக்க | பிக் பாஸ் பிரபலம் திடீர் மரணம்! கடைசியாக போட்ட எமோஷனல் பதிவு..இணையத்தில் வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News