ஜூன் மாதம் இருபதாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டிஎன்ஏ' ( DNA) திரைப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் மாரி செல்வராஜ் கலந்து கொண்டார். இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், ''இந்தப் படத்தை நேற்று இரவு தான் என் உதவியாளர்களுடன் பார்த்தேன். அதன் பிறகு திவ்யா கதாபாத்திரத்தின் வடிவமைப்பு குறித்து விவாதித்தோம். திவ்யாவுக்கு என்ன டிஸ்ஸார்டர் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு என் உதவியாளர் மிகவும் எனர்ஜியாக இருப்பார்கள். துருதுருவென்று ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருப்பார்கள் என்று விளக்கினார். நான் அதைப்பற்றி யோசித்துக் கொண்டே படம் பார்க்கிறேன். ஆனால் நான் இங்கு மேடையில் வந்த பிறகு அவருடைய நடவடிக்கையை கவனித்தேன். அவருடைய நடவடிக்கையை பார்த்து தான் கதாபாத்திரத்தை வடிவமைத்து இருப்பார்களோ..! என நினைக்கிறேன். அந்த அளவிற்கு அவர் உற்சாகமாக இருக்கிறார்.
மேலும் படிக்க | ஜூன் to நவம்பரில் வெளியாகும் மாஸ் தமிழ் படங்கள்! அதிரடி லிஸ்ட் இதோ
இந்த படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு இயக்குநர் நெல்சனை மிகவும் பிடிக்கும் ஏனெனில் ஒரு நாள் கூத்து படத்தை பார்த்தேன். பொதுவாக சினிமாவை நாம் தேர்ந்தெடுப்பதற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளது. யார் என்ன சொன்னாலும் கேட்காமல் பிடிவாதமாக நம்முடைய கற்பனைக்கேற்ற கதைகளை தேர்ந்தெடுத்து அந்த கதைகளை திரையில் கொண்டு வருவது.. மற்றொரு வாய்ப்பு என்னவென்றால் எது மக்களுக்கு பிடிக்கிறது... எது வெற்றிகரமானதாக இருக்கிறது... எது நம்மை முன்னிலைப்படுத்தும்? எது நம்மை பிரபலமானவராக உயர்த்தும் என்பது.. என எண்ணி படத்தை இயக்குவது மற்றொரு வகை.
இதில் நெல்சன் இயக்கிய நான்கு படங்களையும் எடுத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். அவர் கனமான கதைகளை தேர்வு செய்திருப்பார். ஒரு நாள் கூத்து படத்தின் கதையின் தொடக்கத்தையே மிகவும் முதிர்ச்சியாக காட்சிப்படுத்தி இருப்பார், அதை பார்த்து அப்போதே நான் வியந்து இருக்கிறேன். அவருடைய படங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு உள்ளார்ந்த வாழ்க்கை இருக்கும். எங்களுடைய தலைமுறையை சார்ந்த இயக்குநர்களில் அவர் தனித்து நிற்கிறார். அவருடைய படைப்புகளில் அவருடைய சமூக பொறுப்புணர்வு தெரிகிறது. சட்டென்று பெரும்பாலான மக்களுக்கு தென்படாத கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதை திரையில் கொண்டு வருகிறார்.
இந்தப் படத்தை பார்க்கும் போது ஓடும் ஆற்றில் ஒரு இலையை தூக்கி போட்டால் அது எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல் செல்வது போல்.. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு நாவலை படிப்பது போன்ற உணர்வுகளை தரக்கூடிய படம் இது. இது போன்ற படத்தை வழங்குபவர் தான் நெல்சன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படத்தை பார்த்த என்னுடைய உதவியாளர்களிடம் படம் எப்படி? என கேட்டபோது, அனைவரும் ஒரு நாவலை வாசித்த பிறகு இருக்கும் அமைதியும் , மௌனமும் தான் அவர்களின் எதிர்வினையாக இருந்தது. இந்தப் படத்தை பார்க்கும் போது எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உண்மையை நேரில் பார்ப்பது போல் இருக்கும்.
நாம் படுத்து எழுந்து சென்ற இடத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தையும், பில் கட்டுவதற்காக ஒரு கவுண்டரில் நின்று கொண்டிருப்போம். அந்த கவுண்டருக்குள் ஒரு கதை இருக்கும். அது நமக்குத் தெரியாது. நாம் ஒரு டாக்ஸிக்குள் பயணித்திருப்போம். அந்த டாக்ஸிக்குள் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்திருக்கும். அது நமக்கு தெரியாது. இப்படி நாம் அங்கங்கே வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே சென்றிருப்போம். இதுபோல் நாம் படுத்து எழுந்த .. தவித்த.. இடங்களில் மனிதநேயம் கொண்ட ஒரு கதை இருக்கும். அதை பிரதிபலிக்கிற படமாகத்தான் டி என் ஏ இருக்கிறது.
நாம் நம்பிக்கையுடன் பழகும் சமூகத்தில் உள்ளவர்களிடம் இப்படி ஒரு விசயம் நடந்தால் எப்படி இருக்கும்? என்ற விசயமும், மனிதத்திற்கு மதிப்பளிக்கக் கூடியவர்களும், மனிதத்தை மதிக்காதவர்களும் வாழும் இந்த சமூகத்தில் நாம் எப்படி வாழ்வது என்பதையும், அதற்குள் நாம் எப்படி சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் இந்தப் படம் பேசுகிறது. இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அறிமுக இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதர்வாவுக்கு இது நியாபகம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. பரியேறும் பெருமாள் படத்தின் ஸ்கிரிப்டை நான் முதலில் சொன்ன ஹீரோ அதர்வாதான். நான் அவரைச் சந்தித்து ஸ்கிரிப்டை சொன்னேன். ஆனால் அவரது பிஸியான ஷெட்யூல் காரணமாக, இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அதர்வா இந்தப் படத்தில் நடிக்கமாட்டார் என்று தெரிந்ததும் நான் மிகவும் வருத்தப்பட்டேன்" என்றார்.
மேலும் படிக்க | புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 - முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ