'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் - இயக்குநர் அட்லீ - சன் பிக்சர்ஸ் ஒன்றிணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளி வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இதனால் திரையரங்குகளுக்கு சென்று சினிமாவை கொண்டாடும் இந்திய அளவிலான ரசிகர்களிடத்தில் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை மிக பெரிய அளவிற்கு ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய திரையுலகில் பிரம்மாண்டமான சரித்திர வெற்றிகளை தொடர்ச்சியாக பதிவு செய்து வரும் அல்லு அர்ஜுன் - அட்லீ - சன் பிக்சர்ஸ் கூட்டணி #AA22xA6 எனும் திரைப்படத்தில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இவர்களின் இணைவு - இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலான சினிமா ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் படத்தைப் பற்றிய அப்டேட்டை தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் அதீத ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுனின் வசீகரிக்கும் திரைத் தோற்றம் - பிரம்மாண்டத்தின் நிரந்தர அடையாளம் சன் பிக்சர்ஸ் - டபுள் ஹாட்ரிக் படைப்பாளி அட்லீ என தனித்துவமான சாதனையாளர்கள் ஒன்றிணைந்திருப்பதால் #AA22xA6 சர்வதேச தரத்திலான VFX தொழில்நுட்பத்துடன் தயாராகி வருகிறது. இந்த வெற்றியைக் காண தமிழ் திரையுலகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய திரை உலகமும் உத்வேகத்துடன் காத்திருக்கிறது. அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் - அட்லீயின் ரசிகர்கள்- சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சர்வதேச தரத்திற்குரிய ரசிகர்கள்- கமர்சியல் ஃபிலிம் ரசிகர்கள்- ஆக்ஷன் ஃபிலிம் ரசிகர்கள் - என அனைத்து தரப்பு ரசிகர்களும் இப்படத்திற்காக உற்சாகம் குறையாமல் காத்திருக்கிறார்கள். இதனை உணர்ந்து கொண்ட படக் குழுவினரும் படத்தைப் பற்றி அப்டேட்டை தொடர்ந்து வெளியிடவுள்ளனர்.
தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி தொடர்ந்து ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படங்களை தந்து, இந்தி சினிமாவில் 'ஜவான்' படத்தின் மூலம் 1100 கோடி வசூலை சாதித்துக் காட்டி, சர்வதேச திரையுலகினரின் கவனத்தைக் கவர்ந்த இயக்குநராக உயர்ந்திருக்கும் அட்லி இயக்கத்தில், அவரது ஆறாவது படைப்பாக, 'புஷ்பா' படத்தின் மூலம் இந்திய சினிமாவின் வசூலில் புதிய சரித்திர சாதனையை படைத்திருக்கும் 'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் இந்த திரைப்படம் - இந்தியாவில் தயாராகும் சர்வதேச தரத்துடனான உலக சினிமாவாக இருக்கும். உலகத்தரத்தில் பான்வேர்ல்ட் படைப்பாக உருவாகும் இப்படத்தில், நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிங்க: 51 வயது நடிகருக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே.. யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ