தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அயலி’ சீரியல்.
அயலி : நேற்றைய எபிசோட் : சிவா அயலிக்காக தனது அம்மாவின் புடவை ஒன்றை கொடுக்க அதை ரித்திகா வீட்டில் போட்டுக் கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அயலி : இன்றைய எபிசோட்: அதாவது எல்லோரும் ஒன்று சேர்ந்து அயலியை திட்டி அந்த புடவையை தூக்கிப்போட்டு கொளுத்த சொல்கின்றனர். இதனால் அயலி வேறு வழியில்லாமல் அந்த புடவையை கொளுத்தி விட்டு மேலே சென்று கண்கலங்கி அழுகிறாள்.
அவளது அப்பா தேவராஜ் அயலிக்கு ஆறுதல் சொல்கிறார். ஜமுனா செல்லம் ஆகியோர் மேலே வந்து சிவாவை பிடித்து திட்டி சத்தம் போடுகின்றனர். அமுதா இந்த விஷயத்தை அயலியிடம் சொல்ல அவள் அதிர்ச்சி அடைகிறாள்.
பிறகு அயலி சிவாவை பார்க்க மேலே வர சிவா தனது அம்மாவின் போட்டோவை பார்த்து எனக்கு மட்டும் ஏன் மா இப்படி நடக்குது? நான் செத்து போய்விட்டார் என்று தன் கலங்கி அழ வேண்டாம் என்று சொல்வது போல அவனது அம்மாவின் போட்டோ கீழே விழுந்து உடைக்கிறது.
சத்தம் கேட்டு உள்ளே வந்த அயலி போட்டோவை எடுத்து சுத்தம் செய்யும் போது அதிலிருந்து வேறொரு போட்டோ கிடைக்கிறது. அதில் சிவாவின் அப்பாவின் கை மட்டும் இருக்கிறது. அந்த போட்டோவில் ஒரு மோதிரம் போட்டு இருப்பது தெரிய வருகிறது.
இதை வைத்து உன்னுடைய அப்பாவை கண்டுபிடிக்கலாம் இது உங்க அம்மா உனக்கு கொடுத்து இருக்க க்ளூ என்று ஆறுதல் சொல்லி அவனை தேற்றுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க| மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் குத்தாட்டம் போட்ட இயக்குனர் முருகதாஸ்
மேலும் படிக்க| நா. முத்துகுமாருக்காக இசை கச்சேரி! கலந்து கொள்ளும் முக்கிய நபர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ