அயலி சீரியல் அப்டேட்: இந்திராணி சொன்ன கல்யாண விஷயம்.. சிவாவுக்கு ஷாக் கொடுத்த அயலி

Ayali Today's Episode Update: இந்திராணி சொன்ன கல்யாண விஷயம் என்ன? அயலியால் சிவாவுக்கு கிடைத்த ஷாக் கொடுத்த அயலி. அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 5, 2025, 01:08 PM IST
  • அயலி : இன்றைய எபிசோட்.
  • சத்தம் போடும் காளியப்பன்.
  • வாழ்க்கை லட்சியம் பற்றி கூறும் அயலி.
அயலி சீரியல் அப்டேட்: இந்திராணி சொன்ன கல்யாண விஷயம்.. சிவாவுக்கு ஷாக் கொடுத்த அயலி

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அயலி’ சீரியல்.

Add Zee News as a Preferred Source

அயலி : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் அயலி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இந்த ராணி குழந்தையை கடத்தியது யார் என்ன தெரிந்தால் சும்மா விடமாட்டேன் என்று சொல்ல காளியப்பன் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சத்தம் போடும் காளியப்பன்

அதாவது, காளியப்பன் ஆண்டனிக்கு போன் செய்து உன்கிட்ட ஒரு வேலையை ஒழுங்காக கொடுத்தால் செய்ய மாட்டியா என்று சத்தம் போடுகிறான். 

இதையடுத்து போலீஸ் அதிகாரி ஒருவர் ஒரு முக்கியமான ஒரு கேஸ் வருது என்று சொல்கிறார்.. மேலும் அயலிடம் இது உனக்கு ரொம்ப முக்கியமானது இந்த அம்மாவோட மரணத்திற்கு காரணமான வர்மா இந்தியாவுக்கு வரப்போவதாக சொல்கிறார். 

இதையடுத்து இந்திராணி கபிலன் இங்கே என்று விசாரிக்க செல்வநாயகி எதையோ சொல்லி சமாளிக்க முயற்சி இந்திராணி அதை கண்டுபிடித்து விடுகிறாள். இதுதான் நீங்க புள்ள வளர்க்கற லட்சணமா என்று சத்தம் போடுகிறாள். 

இதைத்தொடர்ந்து கபிலன் பாரில் பெண்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுக் கொண்டிருப்பது தெரிய வருகிறது. இன்னொரு பக்கம் சிவா சமையலுக்கு வெங்காயம் வெட்டிக் கொண்டிருக்க அப்போது அவன் கண் முன் தோன்றும் மனசாட்சி நீ இப்படியே கண் கலங்கிட்டே இருக்க வேண்டியதுதான் உன்னோட காதல எப்பவும் சொல்ல போறது இல்ல என்று கிண்டல் செய்து பேசுகிறது. 

வாழ்க்கை லட்சியம் பற்றி கூறும் அயலி

அடுத்து அயலி அவனுக்காக பொங்கல் கொண்டு வர சிவா அதை சாப்பிட்டு கொண்டே நான் புரமோஷன் கிடைச்சதும் கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகலாம்னு இருக்கேன் நீ என்ன பண்ண போற என்று கேட்க எனக்கு என் அம்மாவின் மரணத்திற்கு காரணமான கண்டுபிடிக்கணும் அதுதான் என்னுடைய வாழ்க்கை லட்சியம் என்று சொல்கிறாள். 

பிறகு இந்திராணி வீட்டில் ஒரு பூஜை நடத்த ஜோசியர் இந்த ஜாதகம் சரியா பொருத்தமா இருக்கு என்று சொல்ல இந்திராணி கபிலனுக்கு திருமணம் செய்யப் போவதாக சொல்ல அதைக் கேட்டு எல்லோரும் சந்தோஷப்பட கபிலனின் அம்மா செல்வ நாயகி, காளியப்பன் ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர். 

காளியப்பன் உன் பையனுக்கு உன்னை கேட்காமலேயே கல்யாணம் பண்ணி வைக்க போறாளாம் இது எப்படி இருக்கு என்று ஏத்தி விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | லைகா Vs விஷால் வழக்கு! வட்டியுடன் ரூ.21 கோடியை வழங்க வேண்டும்-ஐகோர்ட் உத்தரவு

மேலும் படிக்க | கழுத்தில் மாலை..கோயிலில் கெனிஷா-ஜெயம் ரவி! வைரலாகும் போட்டோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News