)
Bad Girl Movie Press Meet: சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் Bad Girl திரைப்படக் குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு இன்று (செப். 1) நடைபெற்றது. வரும் செப். 5ஆம் தேதி பட வெளியீட்டை முன்னிட்டு இந்த செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Bad Girl திரைப்படத்தின் படத்தின் இயக்குநர் வர்ஷா பரத், தயாரிப்பாளரான இயக்குநர் வெற்றிமாறன், படத்தின் நாயகி அஞ்சலி சிவராமன் மற்றும் படக்குழுவினர் வந்திருந்தனர். மேலும் சிறப்பு அழைப்பாளராக மிஷ்கின் பங்கேற்றார்.
தொடர்ந்து இந்நிகழ்வில் பேசிய Bad Girl திரைப்படத்தின் இயக்குநர் வர்ஷா, "ஏழு மாதம் முன்னாடி ட்ரெய்லர் லாஞ்ச் நிகழ்வில் ஏறியதுதான் முதல் முறை மேடையில் ஏறியது. அதன் பிறகு நிறைய நடந்துவிட்டது. 13 ஃபிலிம் ஃபெஸ்டிவல் சென்றுள்ளது. நிறைய நாடுகள் பயணித்துள்ளோம். எனது திரைப்படத்தை குப்பைபடம் என்று கூறும் போது ரோட்டர்டோம் திரைப்பட விழாவில் எனது திரைப்படம் மிகவும் பிரபல இயக்குநரின் (Costa-Gavra) திரைப்படத்திற்குப் பின்னர் திரையிடப்பட்டது.
நீங்கள் ஒப்புக்கொள்ளாமல் இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். மண்ணையும் பொண்ணையும் காப்பத்துவோம் என சொல்பவர்கள்தான் இந்த திரைப்படத்தை எடுத்தவர்கள், தயாரித்தவர்கள். என்னை ஆதரித்தவர்களின் குடும்ப பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்தனர். இதில் இருந்தே அவர்களின் அரசியல் என்ன என்பது தெரியும். அவர்கள் மனநிலை சரியில்லாமல் உள்ளனர்.
பெண்கள் முடிவெடுப்பவர்களாக இருப்பதுதான் இங்கு பிரச்சினையாக உள்ளது. பெண்கள் sex object ஆக இருக்கிற வரை எந்தவொரு பிரச்சினையும் இல்லை. Sexual being ஆக இருக்கிறதுதான் அவர்களுக்கு பிரச்சினையாக உள்ளது. கலாச்சாரத்தை சீரழிப்பதாக கூறுகின்றனர். கலாச்சாரம் தான் பெண்களை காப்பாற்ற வேண்டும். பெண்கள் கலாச்சாரத்தை காப்பாற்ற தேவையில்லை. கலாச்சாரத்தை பாதுகாப்பது பெண்களின் வேலை அல்ல. கலாச்சாரம்தான் பெண்களை பாதுகாக்க வேண்டும்" என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், "விமர்சனங்கள் முள் போல கூர்மையாக இருக்கலாம், குத்தாலாம். ஆனால் கலைஞர்களில் கழுத்தை அறுக்கக் கூடாது. நல்ல திரைப்படம் 50 சதவித மக்களுக்கு பிடிக்கும், 50 சதவிகித மக்களுக்கு பிடிக்காது. ஆனால் 50 சதவீத மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தான் ஒரு திரைப்படம் சரியாக எடுக்கப்பட்டுள்ளது என அர்த்தம். ஆனால் நூறு சதவீத மக்களுக்கும் பிடிக்கவில்லை என்றால் அந்த படைப்பில் ஏதோ தவறு உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் இப்போது உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் அப்படி அல்ல. இந்த திரைப்படம் கண்டிப்பாக 25 சதவீதம் பேருக்கு பிடிக்கும், அவர்கள் வெளியே பிடிக்கும் என சொல்வார்கள். ஆனால் இன்னொரு 25 சதவீதம் பேருக்கு பிடித்தாலும் அதை அவர்களுக்குள்ளேயே மறைத்து வைத்துக் கொள்வார்கள். அப்படிப்பட்ட கதை அம்சம் கொண்டது இந்த திரைப்படம்.
இந்தத் திரைப்படம் பதின்ம வயது பெண்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை தெளிவாக காண்பிக்கிறது. காமம் ஆண்களுக்கான விஷயம் மட்டும் இல்லை, அது பெண்களுக்கானதும் கூட... இறைவன் குழந்தை பெற்றுக் கொள்ள கர்ப்பப்பையை பெண்களுக்கு கொடுத்தான். பெண்கள் ஆண்களை விட எப்போதுமே மேலானவர்கள்தான்" என கூறினார்.
Bad Girl: வெற்றிமாறனின் அறிவிப்பு
இந்நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன், இயக்குநராக இருப்பது எளிது என்று தயாரிப்பாளராக இருப்பது கடினம் என்றும் பேசியிருந்தார். மேலும், "என்னை போன்ற நபர்கள் தயாரிப்பாளராக இருப்பதும் மிகவும் கடினமான விஷயம். ஆகவே இந்த Bad Girl திரைப்படத்துடன் தயாரிப்பு பணியை நிறுத்திக் கொள்கிறேன். கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் கடையை சாத்திக் கொள்கிறேன்" என அறிவித்தார். இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ