தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் ஒரு புதிய படத்தில் அஜித் அடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது. அதற்கிடையில் தற்போது அஜித் கார் ரேசிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். தனது நீண்ட நாள் கனவு இது என்றும் அஜித் தெரிவித்துள்ளார். இதற்காக அஜித்குமார் ரேசிங் என்ற தனது கார் பந்தய அணியும் அவர் உருவாக்கியுள்ளார். துபாயில் நடைபெற்ற 24 மணிநேர என்டியூரன்ஸ் பந்தயத்தில் அஜித்தின் அணி பங்கேற்று 992 வது பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.
Proud of you your fan @Akracingoffl
Treat equally every one and he know how to behave woman and men much respect on #Ajith sir #AjithKumarRacing pic.twitter.com/zVj4DjQyX1— AK_தாசன் (@Anbu_Ajithkumar) January 16, 2026
துபாயில் அஜித்தை சந்திக்கலாம்
இந்நிலையில் துபாயில் உள்ள ஆட்டோட்ரோம் மைதானத்தில் அஜித்துடன் ரேஸ் காரில் அமர்ந்து பயணிக்கும் வாய்ப்பு தற்போது ரசிகர்களுக்கு கிடைக்க உள்ளது. இது தொடர்பான அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. கார் ரேசிங்கிற்காக அஜித் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பல ஆண்டுகளாக எந்த வித விளம்பரங்களிலும் நடிக்காத அவர் சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது அஜித்தின் ரேஸ் காரில், அவருடன் பக்கத்து சீட்டில் அமர்ந்து பயணிக்கும் வாய்ப்பை ரசிகர்கள் பெற முடியும். இந்த புதுவிதமான அனுபவத்திற்கு கட்டணமாக இந்திய மதிப்பில் சுமார் 86,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. துபாயின் நாணய மதிப்பில் 3500 திர்ஹாம்ஸ் ஆகும். இந்த கட்டணத்தை செலுத்தி முன்பதிவு செய்பவர்கள் அஜித்துடன் ரேஸ் டிராக்கில் இரண்டு சுற்றுகள் வலம் வரலாம்.
Dubai-la irukkura AK fans-ku semma chance
Thala Ajith oda Ferrari 488-la hot lap experience
Idhu lifetime moment — miss pannadheenga!#ThalaAjith #AK #Dubai #AjithKumarRacing pic.twitter.com/xeMkUz24Cr— Danishkumar | Travel & Movies (@S_Danishkumar) January 18, 2026
எப்படி முன்பதிவு செய்வது?
இந்த வாய்ப்பை பெற விரும்புபவர்கள், துபாய் ஆட்டோட்ரோம் இணையதளம் அல்லது பிளாட்டினம் லிஸ்ட் இணையதளம் மூலம் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். AK24 என்ற Discount Code பயன்படுத்தினால் கட்டண சலுகை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. அஜித்துடன் காரில் ஒன்றாக பயணிக்க குறைந்த அளவில் மட்டுமே ரசிகர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் ரசிகர்கள் புக்கிங் செய்து கொள்வது நல்லது.
பாதுகாப்பு வசதிகள்
அஜித்துடன் காரில் பயணிக்கும் அனைவருக்கும் தலைக்கவசம், ரேஸ் சூட் உள்ளிட்ட முழுமையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும். மேலும், பயணம் தொடங்குவதற்கு முன் பாதுகாப்பு குறித்த விரிவான விளக்கமும் அளிக்கப்படும். அஜித் போன்ற ஒரு சீனியர் நடிகர் மற்றும் ரேஸருடன் ரேஸ் காரில் பயணிப்பது ரசிகர்களுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் படிக்க | பிக் பாஸ் தமிழ் 9 டைட்டிலை தட்டி தூக்கிய திவ்யா.. ரன்னர் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









