பிக் பாஸ் போட்டியாளர் புகைப்பிடிக்கும் வீடியோ வைரல்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Bigg Boss Niroop Nandakumar Video: பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் அறையின் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிரூப் நந்தகுமார் புகைபிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 4, 2025, 05:07 PM IST
பிக் பாஸ் போட்டியாளர் புகைப்பிடிக்கும் வீடியோ வைரல்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Bigg Boss Video Viral: பிக் பாஸ் வீட்டில் ஒரு அறையில் போட்டியாளர் நிரூப் நந்தகுமார் புகைப்பிடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே யாஷிகாவுக்கு லைவ் வீடியோவில் லிப் கிஸ் கொடுத்த போதும் நிரூப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த வீடியோவும் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தியது. யார் இந்த நிரூப் நந்தகுமார்? அவர் எப்பொழுது பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றார் போன்ற விவரங்களை பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

புகைப்பிடிக்கும் வீடியோ:

சமூக வலைதளத்தில் நிரூப் நந்தகுமார் புகைப்பிடிக்கும் வீடியோவை பகிர்ந்து "புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்" என்று கூறி ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இவர் பிக் பாஸ் சீசன்5-ல் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அதன்பிறகு அவர் , 106 நாட்களுக்குப் பிறகு வெளியேறினார். அந்த சீசனில் அவர் 5வது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

யார் இந்த பிக் பாஸ் போட்டியாளர் நிரூப் நந்தகுமார்?

- பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றார்.

- பிக் பாஸ் அல்டிமேட் (Bigg Boss Ultimate) ஓடிடி பதிப்பிலும் பங்கேற்றார்.

- நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவர். மாடலிங் துறையில் ஈடுபட்டுள்ளார். 

- திரைப்படங்களில் நடிக்கும் ஆசையில் பல ஆடிஷன்களுக்குச் சென்றபோது, தனது உயரம் காரணமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

- பிக் பாஸ் மூலம் தனது சினிமா ஆசை நிறைவேறும் என்று நம்பினார்.

- பரத் நடிப்பில் வெளியான 'தலைமைச் செயலகம்' என்ற படத்தில் 'ஹரிஹரன்' என்ற முக்கிய வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.

- நிரூப் நந்தகுமார் நடிகை யாஷிகா ஆனந்தின் நெருங்கிய நண்பர் என்றும், இருவரும் முன்பு காதலர்களாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

- இவர்கள் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் யாஷிகாவுக்கு நிரூப் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின.

- பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்துகொண்டபோது, யாஷிகாவுடன் சமீபத்தில் பிரேக் அப் ஆனதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

- பெங்களூரில் ஒரு ஆட்டோமேஷன் கம்பெனியையும், சென்னையில் ஒரு கிளவுட் கிட்சனையும் நடத்தி வருவதாகப் பிக் பாஸில் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

மேலும் படிக்க - பிக் பாஸில் வந்து விட்டால் சினிமா வாய்ப்பு வந்துவிடாது: தர்ஷிகா பேச்சு!

மேலும் படிக்க - ஆரம்பித்த சில நாட்களிலேயே நிறுத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி! என்ன ஆனது?

மேலும் படிக்க - பிக்பாஸ் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கியவர்! ஒருநாளைக்கு ரூ.10 கோடி - யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News