பிக் பாஸ் 8: வெளியில் வந்தும் சண்டை போடும் முத்துக்குமரன்-செளந்தர்யா! என்ன பிரச்சனை?

Bigg Boss 8 Muthukumaran And Soundariya Fight : சில வாரங்களுக்கு முன்பு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடந்தது. இதில் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆனார்.  

Written by - Yuvashree | Last Updated : Mar 4, 2025, 04:24 PM IST
  • பிக்பாஸ் பிரபலங்கள் சண்டை..
  • வின்னர் vs ரன்னர்..
  • என்னதான் பிரச்சனை
பிக் பாஸ் 8: வெளியில் வந்தும் சண்டை போடும் முத்துக்குமரன்-செளந்தர்யா! என்ன பிரச்சனை?

Bigg Boss 8 Muthukumaran And Soundariya Fight : தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகள் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 8வது சீசன் சமீபத்தில் முடிவடைந்தது. ஆனால் நிகழ்ச்சி முடிந்தும் அதில் பங்கு பெற்ற சில பிரபலங்கள் இன்னும் சண்டை போட்டு வருகின்றனர். 

Add Zee News as a Preferred Source

பிக் பாஸ் 8:

7வது சீசன் வரை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி, பிக் பாஸ். இதில் தன்னால் இணை தொகுப்பாளராக தொடர முடியாது என கமல் அறிவித்ததை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி புது ஹோஸ்டாக மாறினார். “ஆட்டமும் புதுசு ஆளும் புதுசு” எனும் லைனுடன் தொடங்கப்பட்ட இந்த ஷோ, முதல் எபிசோடிலேயே ரசிகர்கள் மனங்களில் இடம் பெறும் வகையில் இருந்தது. ஆனால், எப்போதும் போல இல்லாமல், இந்த முறை இந்நிகழ்ச்சியில், சிறிய அளவிலேயே சர்ச்சைகள் இடம் பெற்றிருந்தன.
டைட்டில் வின்னர்-ரன்னர் யார்?

அக்டோபர் 6ஆம் தேதி ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சி, கடந்த ஜனவரி மாதம் ஜனவரி மாதம் 19ஆம் தேதி முடிவடைந்தது. இதில், விஜய் தொலைக்காட்சியை சேர்ந்த பல பிரபலங்கள் இடம் பெற்றிருந்தனர். ஒரு சிலர், வலுவான பாேட்டியாளர் போல தென்பட்டாலும், எதிர்பார்க்காத நேரத்தில் வாக்குகள் குறைவாக பெற்ற காரணத்தால் போட்டியை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. இறுதியில் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆனார். ரன்னர் அப் பட்டத்தை செளந்தர்யா பெற்றார். 

வெளியில் வந்தும் சண்டையா?

“பிக்பாஸிற்கு முன், பிக்பாஸிற்கு பின்” என அந்த நிகழ்ச்சிக்குள் செல்லும் பிரபலங்களை வேறு படுத்தி பார்க்க முடியும். என்னதான் அந்த வீட்டிற்குள் இருக்கும் போது ஒன்னும் மண்ணுமாக சுற்றினாலும், கடைசியில் வெளியில் வந்த பின்பு யாருடன் ஒன்றாக சுற்றினார்களோ அவர்களையே வெளியில் வந்த பின்பு திட்டுவர். அப்படிப்பட்ட ஒரு சண்டைதான் வின்னர் முத்துக்குமரனுக்கும் ரன்னர் செளந்தர்யாவிற்கும் இடையே நடந்து வருகிறது.

முத்துக்குமரன், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்பு சில நேர்காணல்களில் கலந்து கொண்டு வருகிறார். அதில், ஒரு நேர்காணலில் அவரிடம் “சௌந்தர்யா குறித்த உங்களின் நிலைபாடு என்ன? அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஒரு மாதிரியும், வெளியில் வந்த பின்பு ஒரு மாதிரியும் இருக்கிறாரே?” என்று கேள்வி கேட்டனர். அதற்கு முத்துக்குமரன், “என்னை பொறுத்தவரை சௌந்தர்யா பிக் பாஸ் வீட்டில் இருக்க தகுதி இல்லாத ஆள்தான். ஆனால், என்னுடைய கருத்துக்கும் மக்களின் கருத்துக்கும் வேறுபாடு இருக்கிறது” என்று கூறினார்.

செளந்தர்யாவின் ரிப்ளை:

முத்துக்குமரன் அப்படி பேசியது பிக் பாஸ் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, செளந்தர்யா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து, நான் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து ஒன்றரை மாதம் ஆகிறது. ஆனாலும் ‘இன்னும்’ சிலர் என்னை நாமினேட் செய்து கொண்டே இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இவர், ஒரு வேளை முத்துக்குமரனைதான் கூறியிருப்பாரோ என்று ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. நிகழ்ச்சி முடிந்து இத்தனை நாட்கள் ஆன நிலையில் இப்படி இருவரும் அடித்துக்கொள்வது ரசிகர்களிடையே பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | விஜய் டிவி கிடையாது! இனி ‘இந்த’ சேனலில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கலாம்..எது தெரியுமா?

மேலும் படிக்க | பிக்பாஸ் 8: டைட்டில் வின்னர் முத்துவுக்கு 40 லட்சம்! ரன்னர் சௌந்தர்யாவுக்கு எத்தனை லட்சம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News