)
Bigg Boss 9 Tamil Aadhirai Re Entry : தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக இருக்கிறது, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் சமீபத்தில் தொடங்கியது. இதனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸில் இந்த வாரம் நடப்பது என்ன?
பிக்பாஸ் 9 நிகழ்ச்சி, சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பல போட்டியாளர்கள் டைட்டிலை வெல்லும் கணவுகளோடு உள்நுழைந்தனர். ஆனால், அதில் பலர் பாதியிலேயே கழன்று கொண்டனர். வார இறுதி எபிசோடில் மக்களிடம் குறைவான வாக்குகளை பெற்ற ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். அப்படி, வெளியேற்றப்பட்டவர்குள் ஒருவர், ஆதிரை. அவர், இந்த வாரம் மீண்டும் பிக்பாஸ் 9 நிகழ்ச்சிக்குள் வந்திருக்கிறார்.
ஆதிரை ரீ-எண்ட்ரி:
பிக்பாஸ் 9 வீட்டிற்குள், எப்போதும் கூச்சலும் குழப்பமும் நிலவி வருகிறது. அப்படி, முதல் சில வாரங்களில் அதிகமாக பலர் சவுண்ட் விட்டனர். அதில் ஒருவர்தான் ஆதிரை. ஆரம்பத்தில் இவரை பலரும் ஸ்மார்டான போட்டியாளர் என்று நினைத்தனர். ஆனால், போகப்போக, இவரது ஆட்டம் மங்கி போனது அனைவருக்கும் தெரிந்தது. இவரும், FJ-வும் ஒன்றாக சுற்றி வந்ததையும் கேமராவின் கண்கள் வழியே பலரும் பார்த்தனர். இதையடுத்து, 21வது நாளில் ஆதிரை இந்த வீட்டில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டார். தற்போது, மீண்டும் போட்டிக்குள் நுழைந்திருக்கிறார்.
புது லவ் ட்ராக்கிற்கு முற்றுப்புள்ளி?
ஆதிரை வெளியேறிய சமயத்தில், பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக இன்னொர் லவ் ட்ராக்கும் ஓடு ஆரம்பித்தது. ஆதிரை இருக்கும் போது அவருடன் நெருக்கமான நட்பு பாராட்டிய அதே FJவிற்கும், சக போட்டியாளரான வியானாவிற்கும் ரொமாண்டிக் ட்ராக் ஒன்று ஓடிக்கொண்டு இருக்கிறது. வைல்ட் கார்டில் பழைய போட்டியாளர் ஒருவர் வருகிறார் என்றவுடன் பலரும் யாராக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆதிரை வருவதை பார்ததவுடன், அங்கு நின்று கொண்டிருந்த வியானாவின் முகம் முற்றிலுமாக வாடிப்போனது. இதையடுத்து, ப்ரோமோவில் FJ வியானாவை தனியாக அழைத்துக்கொண்டு போய் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, இவர்கள் இருவருக்குமான லவ் ட்ராக்கிற்கு ஆதிரையால் எண்ட் கார்ட் போடப்படுமா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
#Day56 #Promo3 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) November 30, 2025
Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/LB29RW39wi
லெஃப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி:
நடிகர் விஜய் சேதுபதி, வார இறுதி எபிசோடுகளில் அனைத்து போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கி வருகிறார். பள்ளி ஆசிரியர், தன் வகுப்பு மாணவர்களை திட்டுவது போல, இவர் போட்டியாளர்களை நடத்துவதாக பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் பலர் விமர்சிப்பதுண்டு. கூடவே, தேவையற்ற விஷயங்களுக்கு ஹை பிட்சில் கத்துவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த சீசனில் இவர் இப்படியெல்லாம் செய்யவில்லை என்றும், சிலர் கூறி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ