)
Bigg Boss Tamil Update: தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன், நேற்று முன்தினம் அக்டோபர் 5 மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது . கடந்த சீசனில் தொகுப்பாளராக அறிமுகமாகி, தனது இயல்பான பாணியால் ரசிகர்களை கவர்ந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார்.
மொத்தம் 20 போட்டியாளர்கள் நேற்று பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர். வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையிலான போட்டியாளர்களுடன் ஆரம்பித்திருக்கும் இந்த சீசன், ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த முறை வழக்கம் போல் சினிமா, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள், மாடலிங் மற்றும் விளையாட்டு எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த திறமைசாலிகள் களமிறங்கியுள்ளனர். அதன்படி இந்த சீசனில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், அரோரா சின்க்ளேர், எப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, வினோத், வியானா, பிரவீன், சுபிக்ஷா, அப்சரா CJ , நந்தினி, விக்ரம், கமருதீன், கலையரசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நேற்று முதல் நாள் தொடங்கிய நிலையில், வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் தான் கன்டன்ட் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு எதையாவது செய்து கொண்டே இருக்கிறார். அவரது இந்த செயல் சிலருக்கு பிடித்திருக்கிறது, அதுவே சிலருக்கு இரிட்டேட் செய்கிறது.
இந்நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினேஷன் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த பட்டியலில் முதலாவதாக டாப்பில் அகோரி கலையரசன் இருக்கிறார். வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரை விட பெரிய ஆட்டக்காரர் என்று நினைத்த கலையரசன் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏன் அமைதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை என பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.
இதனிடையே இன்று வெளியான முதல் ப்ரொமோ வீடியோ மற்றும் இரண்டாவது வீடியோ இரண்டிலும் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் இடம்பெற்றிருக்கிறார். அதன்படி முதலில் வெளியான ப்ரோமோ வீடியோவில் திவாகரும், ரம்யாவும் சண்டை வருகிறது போல காட்டப்பட்டுள்ளது. அந்த சண்டையின் தொடர்ச்சியாக தான் இரண்டாவது ப்ரொமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. இரண்டாவது ப்ரோமோவில் தம்பி சும்மா இருப்பா, அவங்க பேசுனதுக்கு அவங்கள சாரி கேட்கச் சொல்ல மாட்டியானு வாட்டர்மெலன் ஸ்டார் கத்தி கூறு வது ப்ரொமோ வீடியோ துவங்கியிருக்கிறது.
மேலும் டபுள் கேம் ஆடாதீங்க என்று திவாகர் வினோத்திடம் கூறுகிறார். இப்படி சண்டை பெருக ஒருபக்கம் வாட்டர்மெலன் கத்த மறுபக்கம் எஃப்ஜேயிடம் கை காட்டிய திவாகரை "என்ன கையை காட்டுற வெட்டிடுவேன்னு சொல்கிறார் எஃப்ஜே. இதையடுத்து கமருதீனுடன் மோதினார் வாட்டர்மெலன் ஸ்டார். அத்துடன் ப்ரொமோ வீடியோ முடிவடைகிறது.
இதனிடையே முதல் வாரத்திற்கான நாமினேஷன் நடந்து முடிந்த நிலையில், இதில், வியானா, ஆதிரை, பிரவீன் ராஜ், பிரவீன் காந்தி, திவாகர் மற்றும் கலையரசன் உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ