)
Bigg Boss 9 Nandhini Walks Out : மக்கள் மத்தியில் அதிக வருகை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளுடன் ஒன்று, பிக் பாஸ். கடந்த வாரம், இந்த நிகழ்ச்சி ஒன்பதாவது சீசன் தொடங்கியது. ஆரம்பத்திலிருந்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீசனில், முதல் ஆளாக பெண் போட்டியாளர் ஒருவர் வெளியேறிருப்பது கவனத்தை ஈர்த்து வருகிறது.
பிக் பாஸ் 9:
பிக் பாஸ் நிகழ்ச்சியை, ஏழாவது சீசன் வரை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். எட்டாவது சீசன் முதல் இந்த பொறுப்பை விஜய் சேதுபதி கையில் எடுத்துக் கொண்டார். கடந்த வாரம், ஆரவாரத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தொடங்கியது. இதில் வித்தியாசமான, மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய 18 போட்டியாளர்கள் களமிறங்கினர்.
முதல் வார எவிக்ஷன்:
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே எவிக்ஷன் தேர்வுமுறையும் நடந்தது. இதில் போட்டியாளர்கள் யார் யாரெல்லாம் இந்த போட்டியில் தொடர வேண்டாம் என்று நினைக்கிறார்களோ அவர்களை நாமினேட் செய்தனர். இதில் யாரெல்லாம் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறார்களோ அவர்கள் வார இறுதி எபிசோடில் வெளியேற்றப்படுவார்கள். ஆனால் அதற்கு முன்னரே இங்கு ஒரு போட்டியாக நிகழ்ச்சியில் இருந்து தாமாக முன்வந்து வெளியேறியிருக்கிறார்.
நந்தினி வெளியேற்றம்:
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்த துடிப்பான போட்டியாளர்களுள் ஒருவராக இருந்தார் நந்தினி. அனைவரும் அவரவர் கதையை பகிர்ந்து கொள்ளும் டாஸ்க் வந்தபோது, நந்தினி அவரது பெற்றோர் குறித்தும் தனது தம்பி குறித்தும் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட சிரமங்கள் குறித்தும் பேசியது பலரையும் சோகம் அடைய செய்தது.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடு படமாக்கப்படுவதற்கு முந்தைய இரவு, நந்தினிக்கு anxiety attack வந்துள்ளது. இது, அதிர்ச்சி அல்லது பதற்ற மிகுதியால் ஏற்படும் பிரச்சனை ஆகும். உடனே, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் confession அறையில் பிக் பாஸ் உடன் பேசினார். அப்போது, தான் இந்த போட்டியில் தொடர விரும்பவில்லை என்று கூறினார். பின்னர் அங்கிருந்த கதவு மூலம் வெளியேறினார்.
வீடியோ:
பிக் பாஸ் லைவில், நந்தினி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கான வீடியோ வெளியானது. இது தற்போது இணையத்திலும் வைரலாகி வருகிறது. அதில், பொய்யாக நடிப்பவர்கள் பலர் இருக்கும் இந்த இடத்தில் தனக்கு இருக்க விருப்பமில்லை என்று கூறி வெளியேறி இருக்கிறார்.
#Nandhini walked out of the house
— S P (@_thecurious1) October 11, 2025
Yenda first week walk out pandrathukune contestant ah select pannveengala? #BiggBossTamil9 #BiggBossTamil #BiggBoss9Tamil #watermelonstar #Kamrudin #VJParvathy
pic.twitter.com/YFreTyomK2
எவிக்ஷன் நடக்குமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை, ஒவ்வொரு வாரமும், ஒரு எவிக்ஷனோ அல்லது டபுள் எவிக்ஷனோ கூட நடைபெறும். இந்த வாரமும் அதற்குதான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில், எவிக்ஷன் நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ