Bigg Boss 9 Tamil Day 4 : தமிழ் திரையுலகில் இருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில், மக்களின் மனம் கவர்ந்ததாக இருக்கிறது, பிக்பாஸ் நிகழ்ச்சி. இதனை, தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதன் 9வது சீசன் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
பிக்பாஸ் சீசன் 9:
சில நாட்களுக்கு முன்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தொடங்கியது. 7வது சீசன் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியை, 8வது சீசன் முதல் விஜய் சேதுபதி கையில் எடுத்துக்கொண்டார். இந்த சீசனில், பல புது முகங்களும், இணையத்தில் பார்த்த வைரலான முகங்களும் இருக்கின்றன.
இந்த நிகழ்ச்சிக்குள், முதல் ஆளாக நுழைந்தவர், டாக்டர் திவாகர் எனும் வாட்டர்மெலன் ஸ்டார். அவரைத்தொடர்ந்து, அரோரா சின்க்லேர், கெமி, விஜே பார்வதி உள்ளிட்ட பலர் உள்நுழைந்தனர். அனைத்து சீசன்களிலும், இயக்குநர் ஒருவர், ராப் பாடகர் ஒருவர், இணைய பிரபலம் ஒருவர் என்று மிக்ஸிங் ஆக இருப்பார்கள். அப்படித்தான் இந்த சீசனுக்கான போட்டியாளர்களும் தேர்வு செய்ய பட்டுள்ளனர்.
முதல் குறும்படம்:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில், 4ஆம் நாள் காலையே தண்ணீர் பிரச்சனியுடன் தொடங்கியது. காலை ஆக்டிவிட்டியாக, வாட்டர்மெலன் அகாடமி எனும் டாஸ்க் நடந்தது. அதில், வாட்டர்மெலன் ஸ்டார், இருந்த ஹவுஸ் மேட்ஸ் அனைவருக்கும் சென்று ஒவ்வொரு பட காட்சியை நடிக்க கற்றுக்கொடுத்தார். சிறப்பாக நடிப்பவர்களுக்கு ‘நடிப்பு அரக்க’ எனும் பட்டமும் தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதால், அதையும் செய்தார்.
காலையில் நடந்த தண்ணீர் பிரச்சனை குறித்து பிக்பாஸ் லிவிங் ஏரியாவிற்கு அனைவரையும் வரவழைத்து பேசினார். அதில், எத்தனை முறை தண்ணீர் மிஸ் ஆனது என்று கேட்டார். அதற்கு கம்ருதீன் நேர்மையாக பதில் சொன்னார், “ஒரே ஒரு முறை” என்று. அதற்கு பிக்பாஸ் குறும்படம் ஒன்றை போட்டு காண்பித்தார். இதனால், அனைத்து ஹவுஸ் மேட்ஸும் அதிர்ச்சியானார்கள்.
இந்த குறும்படத்தில், ஐந்து முறை தண்ணீர் மிஸ் ஆகியிருந்தது. இதை பார்த்தவுடனேயே, கம்ரூதீனை குறை சொல்ல அனைவரும் ஆரம்பித்தார்கள். இதில், ஆதிரையும் கம்ரூதினும் வாக்குவாதம் செய்தார்கள். கடைசியில் யாரும் பேச வேண்டாம் என்று கூறிக்கொண்டு அவர்களே சமாதானம் ஆகிக்கொண்டனர்.
யாருக்கு மக்கள் ஆதரவு?
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது, வாட்டர் மெலன் ஸ்டார் உள்நுழைகிறார் என்றவுடன் அனைவரும் அவர் மீது வெறுப்பை உமிழ ஆரம்பித்தனர். போட்டி ஆரம்பித்த பின்னர், பிற ஹவுஸ் மேட்ஸும் அதையே செய்வதால், மக்களுக்கு வாட்டர்மெலன் ஸ்டார் மீது இருக்கும் இறக்கம் கூடியது. இந்த வார நாமினேஷனில் திவாகரும் இருக்கிறார். இவர் அனேகமாக காப்பாற்றப்படுவார் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | பிக் பாஸ் 9: முதல் வாரமே இத்தனை ட்விஸ்டா? முழு நாமினேஷன் லிஸ்ட் இதோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









