)
BB 9 Nominated Contestants First Week : சமீபத்தில் ஆரம்பித்த ரியாலிட்டி நிகழ்ச்சி, பிக்பாஸ் சீசன் 9. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், இம்முறை பல முக்கிய மற்றும் வித்தியாசமான நபர்கள் போட்டியாளர்களாக வந்துள்ளனர். இதையடுத்து, இந்த வாரம் யாரெல்லாம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
பிக்பாஸ் 9:
ஆங்கிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிக் பிரதர் என்கிற நிகழ்ச்சி, இந்தியாவில் பிக்பாஸ் என்கிற பெயரில் மருவி, ரியாலிட்டி ஷோவாக மாறியது. தமிழில், இந்த நிகழ்ச்சி 2017ஆம் ஆண்டு தமிழில் ஆரம்பிக்கப்பட்டது. 7வது சீசன் வரை, கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருந்தார். அதன் பிறகு, 8 மற்றும் 9 சீசன்களுக்கு விஜய் சேதுபதி ஹோஸ்டாக மாறினார்.
கடந்த சீசன், நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இந்த மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதல் போட்டியாளராக வந்தவர், திவாகர் எனும் வாட்டர் மெலான் ஸ்டார். அவரைத்தொடர்ந்து அரோரா சின்க்லேர், எஃப் ஜே, விஜே பாரு, துசார், கனி திரு, சபரிநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய போட்டியாளர்களாக இருக்கின்றனர்.
நாமினேஷன்-எவிக்ஷன்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இண்ட்ரோ எபிசோட் முடிந்த பிறகு, வீட்டில் சில பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்தன. வந்த முதல்னாளே, திவாகர், பிரவீன் ராஜ், கம்ருதீன், கெமி உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை பார்த்த போட்டியாளர்களுக்கு இந்த சீசன் இப்படித்தான் கடுமையாக இருக்கப்போகிறது என்பது ஆரம்பித்திலேயே தெரிந்து விட்டது.
பிக்பாஸ் போட்டியை பொருத்தவரை, முதல் வாரத்தில் இருந்தே, போட்டியாளர்கள் தங்களுக்குள் யாரெல்லாம் வெளியில் போக வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்களை நாமினேட் செய்வார்கள். அவர்களில் யார் மக்களின் அதிக வாக்குகளை யார் பெறவில்லையோ அவர் வெளியேற்றப்படுவார். இந்த நிலையில், முதல் வாரத்திற்கான நாமினேஷன் நடந்து முடிந்தது. இதில், வியானா, ஆதிரை, பிரவீன் ராஜ், பிரவீன் காந்தி, திவாகர் மற்றும் கலையரசன் உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டிருக்கின்றனர்.
வெளியேறப்போவது யார்?
பிக்பாஸ் 9 போட்டியாளர்கள், இந்த வாரத்தில் எப்படி விளையாடுகிறார்களோ, அதை வைத்துதான் வார இறுதியில் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே, ஆரம்பத்திலேயே இதில் யார் வெளியேற்றப்படுவார், யார் உள்ளே இருப்பார் என்பதை கண்டுபிடிப்பது சிரமம். வெள்ளி அல்லது சனிக்கிழமை வாக்கில், இது குறித்த தகவல் வெளியாகலாம்.
கார்னர் செய்யப்படும் வாட்டர் மெலான் ஸ்டார்!
இணையத்தில், கஜினி படத்தின் காட்சியை ரீ-கிரியேட் செய்து தன்னை பிரபலப்படுத்திக்கொண்டவர், திவாகர். இவரே தன்னை வாட்டர் மெலான் ஸ்டார் என்றும் சொல்லிக்கொள்வார். பல நேர்காணல்களில், இவர் பேசியிருக்கும் விஷயங்கள் ரசிகர்களை பெரிதும் எரிச்சலடைய வைத்துள்ளது. பிக்பாஸ் 9 நிகழ்ச்சிக்கு சென்ற முதல் சில நிமிடங்களிலேயே அவர் கேமராவை பார்த்து நடித்ததும், நடனம் ஆடியதும் பார்ப்பவர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது. இவர் செய்வது தங்களை எரிச்சலடைய வைப்பதாக சில போட்டியாளர்கள் கூறி வருகின்றனர். அந்த வீட்டில், இவர் மட்டும் தனிமைப்படுத்தப்படுவது போலவும் ஒரு பிம்பம் எழுந்துள்ளது. எனவே, இவருக்கு இது பாசிடிவாகவோ அல்லது நெகடிவாகவோ போகலாம் என்பது பிக்பாஸ் வெறியர்களின் கணிப்பாக உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ