பிக்பாஸ் 9: ஒரு வாரத்திற்கு பிரவீன் காந்திக்கு இத்தனை லட்சமா? ஷாக் ஆகாதீங்க!

பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ல், முதல் வாரமே போட்டியாளர் நந்தினி 'வீட்டில் இருக்க முடியாது' எனக் கூறி தன்னுடைய விருப்பத்தின் பேரில் வெளியேறினார். முதல் வார இறுதியில் (விஜய் சேதுபதி வரும் எபிசோடில்), குறைவான வாக்குகள் பெற்றதன் அடிப்படையில், இயக்குநர் பிரவீன் காந்தி எலிமினேட் செய்யப்பட்டார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 13, 2025, 06:32 PM IST
  • இயக்குநர் பிரவீன் காந்தி எலிமினேட் செய்யப்பட்டார்.
  • பிரவீன் காந்தி சம்பள விவரம்.
பிக்பாஸ் 9: ஒரு வாரத்திற்கு பிரவீன் காந்திக்கு இத்தனை லட்சமா? ஷாக் ஆகாதீங்க!

Bigg Boss 9 Tamil Praveen Gandhi Salary Details: பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ல், முதல் வாரமே போட்டியாளர் நந்தினி 'வீட்டில் இருக்க முடியாது' எனக் கூறி தன்னுடைய விருப்பத்தின் பேரில் வெளியேறினார். முதல் வார இறுதியில் (விஜய் சேதுபதி வரும் எபிசோடில்), குறைவான வாக்குகள் பெற்றதன் அடிப்படையில், இயக்குநர் பிரவீன் காந்தி எலிமினேட் செய்யப்பட்டார்.

Add Zee News as a Preferred Source

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன், கடந்த அக்டோபர் 5 மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. கடந்த சீசனில் தொகுப்பாளராக அறிமுகமாகி, தனது இயல்பான பாணியால் ரசிகர்களை கவர்ந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தனர். வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையிலான போட்டியாளர்களுடன் ஆரம்பித்திருக்கும் இந்த சீசன், ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த முறை வழக்கம் போல் சினிமா, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள், மாடலிங் மற்றும் விளையாட்டு எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த திறமைசாலிகள் களமிறங்கியுள்ளனர். அதன்படி இந்த சீசனில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், அரோரா சின்க்ளேர், எப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, வினோத், வியானா, பிரவீன், சுபிக்‌ஷா, அப்சரா CJ , நந்தினி, விக்ரம், கமருதீன், கலையரசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய்க் கொண்டுதான் இருக்கிறது. அதன்படி இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் நந்தினி. அவர் வீட்டின் மற்றவர்களுடன் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் மன அழுத்தத்தால் தாமாக முன்வந்து வெளியேறினார்.

இந்நிலையில் அடுத்ததாக முதல் வாரத்திற்கான எலிமினேஷனில், குறைவான வாக்குகளைப் பெற்ற காரணத்தினால் இயக்குனர் பிரவீன் காந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அவர் விஜய்சேதுபதி வந்த எபிசோடில் வெளியேற்றப்பட்டார். இதன் மூலம் முதல் வாரத்திலேயே இரண்டு போட்டியாளர்கள் (நந்தினி, பிரவீன் காந்தி) பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனிடையே சினிமா இயக்குநர் பிரவீன் காந்தி ஒரு வாரம் பிக் பாஸ் வீட்டில் தங்கியிருந்ததற்கு வாங்கிய சம்பள விவரம் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது. அவருக்கு ஒரு நாளுக்கு ரூ. 35,000 வீதம் ஒரு வாரத்திற்கு மொத்தம் ரூ. 2.45 லட்சம் சம்பளத்துடன் அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாக தகவல் பரவி வருகிறது.

மேலும் படிக்க | பிரியங்கா மோகனின் AI கவர்ச்சி புகைப்படங்கள்! இணையத்தில் அவரே வெளியிட்ட பதிவு..

மேலும் படிக்க | பிக்பாஸ் 9 : போட்டியில் இருந்து விலகிய நந்தினி! காரணம் என்ன? அவரே சொன்னது-வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News