)
Bigg Boss 9 Tamil Today Episode Promo : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 9 நிகழ்ச்சி, மக்களிடையே கவனம் ஈர்த்த நிகழ்ச்சிகளுள் ஒன்றாக உள்ளது. இந்த சீசனில் ஆரம்பத்திலேயே போட்டியாளர்கள் கொஞ்சம் அதிரடியாக அடித்து ஆரம்பித்தனர்.
பிக்பாஸ் 9 :
பிக்பாஸ் நிகழ்ச்சியை ஏழாவது சிசன் வரை, கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அதன் பிறகு, அவர் இதிலிருந்து விலகி கொள்வதாக கூறவே, இந்த பொறுப்பு விஜய் சேதுபதியிடம் சென்றது. இதையடுத்து, அவர் கடந்த 8வது சீசன் முதல் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
9வது சீசனின் ஆரம்பத்திலேயே, போட்டியாளர்களின் திறனை சோதிக்கும் சில பரீட்சைகள் அவர்களுக்கு வைக்கப்பட்டது. இதில் ஒரு சில பேர் முண்டியடித்து பாஸ் ஆகினர். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் வெளியேற்றப்பட, ஆட்களை இன்னும் சேர்க்க வைல்ட் கார்டை கொண்டு வந்தனர். இந்த வைல்ட் கார்டில் திவ்யா கணேஷ், அமித் பார்கவ், சாண்ட்ரா, பிரஜின் என நான்கு பேர் உள்நுழைந்துள்ளனர். இதுவரை இவர்கள் அனைவருமே, ஓரளவிற்கு மக்கள் மத்தியில் நன்றாக பெயர் பெற்ற போட்டியாளர்களாக இருக்கின்றனர்.
வாட்டர்மெலன் ஸ்டார் வெளியேற்றம்:
வாட்டர் மெலன் ஸ்டார் என்று தனக்கு தானே பெயர் வைத்துக்கொண்ட திவாகர், பிக்பாஸ் 9 நிகழ்ச்சிக்குள் முதல் ஆளாக நுழைந்தார். இவர் உள்ளே சென்ற போது பலர், இரண்டு வாரங்களில் இவர் வெளியே வந்து விடுவார் என்று நினைத்தனர். ஆனால் அதைதாண்டி சில வாரங்கள் அவர் தாக்குப்பிடித்தார். தற்போது, அவர் இந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
வன்மத்தை கக்கும் போட்டியாளர்கள்:
பலர் ஒரே வீட்டில் இருக்கும் போது சண்டை அதிகமாக வருவது சகஜம்தான். ஆனால் பிக்பாஸ் 9 நிகழ்ச்சியை பொருத்தவரை அது கொஞ்சம் ஓவராகவே நடக்கும். இங்கு ஒருவர் மீது ஒருவர், கிடைக்கிற கேப்பில் வன்மத்தை கக்கிக்கொண்டே இருப்பர். இதற்கு ஏற்றவாறு, இன்று வெளியாகியிருக்கும் மூன்று ப்ரமோக்களும் இருக்கிறது.
#Day43 #Promo3 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) November 17, 2025
Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/AXIZEeHyIm
போட்டியாளர்கள், “இவங்கெல்லாம் போட்டியே இல்ல..” என்று நினைப்பவர்கள் யார் யார் என்பதை, அவர்களுக்குள்ளாகவே தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி, வியானா மற்றும் சுபா ரம்யாவை கூற, சாண்டரா கனியை கூறுகிறார். கம்ருதின் கனியை கூறிய பின், கனியும் கம்ருதினை அப்படி கூறினார்.
பார்வதியை கார்னர் செய்யும் ஹவுஸ் மேட்ஸ்?
திவாகர் வெளியேறிய சமயத்தில், பலரது கண்ணும் பார்வதி மேல்தான் இருந்தது. காரணம், வாட்டர்மெலன் ஸ்டாருடன் ஆரம்பத்தில் இருந்து சுற்றிக்கொண்டிருந்த ஒருவர் அவர்தான். எதுவாக இருந்தாலும், இருவரும் வந்து ரகசியமாக பேசிக்கொள்வர். ஆனால், இப்போது திவாகரை பார்வதி அனுப்பி வைத்து விட்டதாக ஹவுஸ் மேட்ஸ் பேசிக்கொள்வது மூன்றாவது ப்ரமோவில் வெளியாகி இருக்கிறது. அதே போல, ஆரம்பத்தில் ஆதரவாக நின்ற கம்ருதினும் இப்போது அரோரா பக்கம் சாய்ந்திருக்கிறார். எனவே, பார்வதி இனி வரும் நாட்களில் இவர்களால கார்னர் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ