Bigg Boss Julie Reveals Groom Face : மக்கள் மத்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தெரிந்த முகமாக மாறியவர், ஜூலி. இவர், சமீபத்தில் தனது திருமண அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இப்பாேது மாப்பிள்ளை யார் என்கிற தகவலையும் வெளியிட்டிருக்கிறார்.
பிக்பாஸ் ஜூலி:
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மற்றும் பலரையும் திரும்பி பார்க்க வைத்த பிக் பாஸ் சீசன் ஆக இருந்தது, சீசன் 1. இதில் ஜூலி முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். இவர், அந்த சீசனின் சர்ச்சைக்குரிய போட்டியாளராகவும் பார்க்கப்பட்டார்.
ஜூலி, நர்சிங் படித்திருக்கிறார். 2017 ஆம் ஆண்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இவர் அதில் பெரிதாக தலையிட்டு கோஷமிட்ட வீடியோக்கள் அப்போது வைரல் ஆகின. இதையடுத்து, அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. இதில், அவர் ஓவியாவிற்கு எதிராக செயல்பட்டதால் இவரை பலருக்கும் பிடிக்காமல் போனது. ஆனால், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்குள் நுழைந்த போது ஆளே மாறிப்போன இவர், அப்போட்டியின் ரன்னர் அப் பட்டத்தை வென்றார்.
திருமண அறிவிப்பு:
2025ஆம் ஆண்டில், சர்ப்ரைஸாக திருமண அறிவிப்பை வெளியிட்ட செலிப்ரிட்டிகளுள் ஒருவராக இருக்கிறார், ஜூலி. சில நாட்களுக்கு முன்பு, மாப்பிள்ளையின் போட்டோவை வெளியிடாமல் பாேட்டோவை பதிவிட்ட அவர், அவரை பார்க்கும் வரை காத்திருங்கள் என்று பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அவர் இப்போது திருமணம் செய்து கொள்ளப்போகும் நபரின் முகத்தை காட்டி பதிவினை வெளியிட்டிருக்கிறார்.
இந்த நிச்சயதார்த்த வீடியோவிலும், அவர் மாப்பிள்ளையின் முகத்தை காட்டவில்லை என்றாலும் அவரை டேக் செய்திருக்கிறார். இவரது பெயர், முகமது இக்ரீம். இவர், மீடியா சம்பந்தமான துறையில் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் இவரும், திரைத்துறை கலைஞராக இருக்கலாம் என ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர். காரணம், தனது இன்ஸ்டா பயோவில் Artist என்று குறிப்பிட்டுள்ளார். இதைத்தாண்டி இவர் குறித்த பிற தகவல்கள் எதுவும் இணையத்தில் இல்லை.
ஜூலி நடித்த தொடர்கள் மற்றும் படங்கள்:
ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆளே மாறிவிட்டார். தன்னை நோக்கி அனைவரும் பொழிந்த வெறுப்பை மாற்ற வேண்டும் என்று நினைத்த அவர், அதற்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை பயன்படுத்தி கொண்டார். முன்னர் போல இல்லாமல், யார் மத்தியிலும் ட்ரோல் மெட்டீரியல் ஆகிவிடக்கூடாது என்று நினைத்த அவர், இப்போது பொருமையாகவும் நிதானமாகவும் நடந்து கொள்கிறார்.
ஜூலி, அம்மன் தாயி என்கிற படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து, 2020ல் வெளியான ‘நான் சிரித்தால்’ 2018ல் வெளியான ‘மன்னர் வகையரா’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் கவனிக்கத்தக்க கதாப்பாத்திரங்களில் வந்தார். இப்போதும், அவ்வப்போது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைக்காட்டி வருகிறார்.
மேலும் படிக்க | இளம் வயதிலேயே திருமணம் செய்துக்கொண்ட நடிகைகள்.. யார் யார் பாருங்க!
மேலும் படிக்க | பிக்பாஸ் ஜூலிக்கு திருமணம்! மாப்பிள்ளை யார்? வைரல் போட்டோஸ்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









