)
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் மிகவும் பிரபலமான மற்றும் எதிர்பார்க்கப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்றாக பிக்பாஸ் தமிழ் உள்ளது. கடந்த 8 சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், ஒன்பதாவது சீசன் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. தமிழில் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த இந்த நிகழ்ச்சி, இந்த ஆண்டும் புதிய திருப்பங்கள், சுவாரஸ்யமான போட்டியாளர்கள் மற்றும் விறுவிறுப்பான டாஸ்க்குகளுடன் களமிறங்க தயாராகிவிட்டது. விஜய் டிவி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9, வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவிருப்பதாக ஜியோஸ்டார் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த சீசன் 8ஐ கமல்ஹாசனுக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெற்றிகரமாக தொகுத்து வழங்கினார். இந்நிலையில், இந்த சீசனையும் அவரே தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது இயல்பான மற்றும் கலகலப்பான தொகுப்பு நடை, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இருப்பினும், முதல் ஏழு சீசன்களை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளதா என்ற செய்திகளும் மெல்ல பரவி வருகின்றன. ஆனால், விஜய் சேதுபதியே தொகுப்பாளராக தொடர்வார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

ஒன்பதாவது சீசனின் தொடக்க விழா, அக்டோபர் முதல் வாரத்தில், மாலை 6 மணி முதல் விஜய் டிவி மற்றும் ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பாகும். இந்த முறை, "புதிய விதிகள், புதிய ஆட்டம்" என்ற டேக்லைனுடன் நிகழ்ச்சி தொடங்கவிருப்பதால், முதல் நாளிலிருந்தே பல ஆச்சரியங்களும், அதிரடி திருப்பங்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில், சுமார் 18 முதல் 20 போட்டியாளர்கள் கலந்துகொள்ள விருப்பதாகவும், அவர்களில் சினிமா, சின்னத்திரை, சமூக ஊடக பிரபலங்கள் மற்றும் பொதுமக்களிலிருந்து சிலர் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு சீசனிலும், பிக்பாஸ் வீடு ஒரு முக்கிய அங்கமாக விளங்கும். அந்த வகையில், இந்த சீசனுக்காக, சென்னை EVP ஃபிலிம் சிட்டியில் உள்ள பிக்பாஸ் வீடு, நவீன வசதிகளுடன், புதிய வடிவமைப்பில் மெருகேற்றப்பட்டுள்ளது. போட்டியாளர்களுக்கு சவால்களை கொடுக்கும் வகையிலும், அவர்களின் மனநிலையை சோதிக்கும் வகையிலும் வீட்டின் உள் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதிலிருந்தே, சமூக வலைதளங்களில் இது குறித்த விவாதங்கள் சூடுபிடிக்க தொடங்கிவிட்டன. போட்டியாளர்களின் பட்டியல், இந்த முறை என்னென்ன டாஸ்க்குகள் இருக்கும் என்பது போன்ற ஊகங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ