Bigg Boss Tamil 9 Day 11 Promo : தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருக்கிறது, பிக்பாஸ் 9. இந்த நிகழ்ச்சியில் இம்முறை பல தெரிந்த முகங்கள் பாேட்டியாளர்களாக களமிறங்கி இருக்கின்றனர். இந்த நிலையில், நாள் 11-ன் ப்ரோமோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் 9 நாள் 11 ப்ரோமோ:
பிக்பாஸ் 9 நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது, அதில் இருந்த ஒரு சில பேர் ‘இவர்கள் வெகு நாட்களுக்கு இந்த வீட்டில் தாக்குப்பிடிக்க மாட்டார்கள்’ என்று தாேன்றியது. அப்படி தாேன்றியவர்களில் இரண்டு பேர் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினர். போட்டியாளர் நந்தினி, தன்னால் இந்த நிகழ்ச்சியில் தொடர முடியாது என்று கூறி விலகினார். இயக்குநர் பிரவீன் காந்தி வாக்குகள் குறைவாக பெற்றதால் வெளியேற்றப்பட்டார்.
இந்த வாரத்தின் வீட்டு கேப்டனாக, துஷார் இருந்தார். தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவின் படி, பிக்பாஸ் அனைவரையும் லிவ்விங் ஏரியாவில் அழைத்து உட்கார வைத்து அர்ச்சனை செய்கிறார். “எல்லா சீசனும் இந்த பிக்பாஸ் வீடு ஒவ்வொரு விஷயத்திற்கு பெயர் போகும். இந்த சீசனில் இதற்கு கிடைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா? ‘ஒழுக்கமே இல்லாத வீடு’ என்றுதான். தூங்குவது, மைக் மாட்டாதது..துஷார் நீங்களே மைக் போடுவதில்லை. நீங்களே மைக் போடாத போது பிறரை எப்படி மைக் மாட்ட சொல்வீர்கள். ஒழுக்கம் இல்லாத இந்த வீட்டிற்கு ‘விட்டத்தல’யும் தேவையில்லை” என்று கூறினார். இதனால், இவரிடம் இருந்து தலைவர் பதவி பறிக்கப்பட்டிருப்பது இன்றைய எபிசோடில் இருக்கும் என்று தெரிகிறது.
#Day11 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/1dWKqAsZ4k
— Vijay Television (@vijaytelevision) October 16, 2025
ஜாலியாக இருந்த போட்டியாளர்கள்..
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் பாேட்டியாளர்கள் ஒவ்வொருவரும், விளையாட வந்துள்ளோம் என்று யோசிக்காமல், ஜாலியாக விடுமுறைக்கு வந்திருப்பது போல பொழுதை கழிப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இவர்கள் செய்த சில விஷயங்களும் பார்ப்பதற்கு அப்படித்தான் இருந்தது. வார இறுதி எபிசோடில் விஜய் சேதுபதியிடம் இருந்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய பின்பு சில நாட்களுக்கு திருந்தி நடந்தனர். ஆனாலும் பழைய நிலைக்கு மீண்டும் வந்து விட்டனர். இதன் பிறகாவது ஏதேனும் மாற்றங்கள் நிகழ்கிறதா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
துஷார்-அரோரா நெருக்கம்?
கடந்த சில நாட்களாக, துஷாரும் அரோராவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகளும் நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டு வருகிறது. இருவரும் அடிக்கடி கைக்கோர்த்துக்கொள்வது, கட்டிப்பிடித்துக்கொள்வது அனைத்தையும் பார்க்கும் ரசிகர்கள், இவர்களுக்குள் ஏதேனும் ட்ரெயின் ஓடுகிறதா? என்று கேட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | பிக்பாஸ் 9: ஒரு வாரத்திற்கு பிரவீன் காந்திக்கு இத்தனை லட்சமா? ஷாக் ஆகாதீங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









