பிக் பாஸ் தமிழ் 9 டைட்டில் வின்னர் இவர்தான்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

Bigg Boss Tamil Season 9 Finale Title Winner Prize Amount: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9' நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை ஃபைனல் ஒளிபரப்பாகப் போகும் இந்த தருணத்தில், வெற்றியாளருக்கு எவ்வளவு பரிசித் தொகை வழங்கப்பட உள்ளது என்பதை இந்த கட்டுரையில் காணலாம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 17, 2026, 09:55 AM IST
  • மக்கள் மத்தியில் ரியாலிட்டி எழுச்சியாக இருக்கிறது பிக் பாஸ்.
  • வினோத் 18 லட்சத்துடன் வீட்டை வேலையேறினார்.
  • ஜனவரி 18 ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு நிகழப்போக்கும் பிரம்மாண்ட இறுதிப்போட்டி.
பிக் பாஸ் தமிழ் 9 டைட்டில் வின்னர் இவர்தான்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

Bigg Boss Tamil Season 9 Finale Title Winner Prize Amount: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9' நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை ஃபைனல் ஒளிபரப்பாகப் போகும் இந்த தருணத்தில், வெற்றியாளருக்கு எவ்வளவு பரிசித் தொகை வழங்கப்பட உள்ளது என்பதை இந்த கட்டுரையில் காணலாம். 

Add Zee News as a Preferred Source

மக்கள் மத்தியில் ரியாலிட்டி எழுச்சியாக இருக்கிறது பிக் பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியை இப்போது 8வது சீசன் முதல் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நாளை இந்த நிகழ்ச்சி கிராண்ட் பினாலே என்பதால் தற்போது நேற்று மற்றும் இன்று 4 பைனலிஸ்ட்டின் பயண வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. நேற்று விக்ரமின் பயண வீடியோ வெளியான நிலையில் இன்று மீதம் இருக்கும் 3 போட்டியாளர்களின் பயண வீடியோ ஒளிபரப்பாகும்.

முன்னதாக பணப்பெட்டி டாஸ்க்கில் இறுதிப்போட்டியாளர்களில் ஒருவராக இருந்த வினோத் 18 லட்சத்துடன் வீட்டை வேலையேறினார். தற்போது  நூறு நாட்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, நாளை அதாவது ஜனவரி 18, 2026 அன்று பிரம்மாண்ட இறுதிப்போட்டி நடைபெற்று நிறைவடைய உள்ளது. தற்போது நான்கு போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ள நிலையில், நாளை யார் அந்த வெற்றியாளர் என்பதை அறிய ஒட்டுமொத்த ரசிகர்களும் தற்போது மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

இந்த சீசனின் இறுதி போட்டியாளர்களாக அரோரா, விக்கல்ஸ் விக்ரம், சபரிநாதன் மற்றும் திவ்யா கணேஷ் ஆகியோர் உள்ளனர். மக்களின் தேர்வால் இவர்களில் ஒருவர்தான் இந்த சீசனின் வெற்றியாளராக மகுடம் சூடுவார் தொகுப்பாளர் விஜய் சேதுபதி.

தற்போதைய கசிந்த சில தகவலின் படி, திவ்யா கணேஷ் மற்ற போட்டியாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. பல முன்னணி நியூஸ் சேனல்கள் திவ்யா கணேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியீட்டு வருகின்றனர். இருப்பினும், இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதே உண்மை.

இரண்டாம் இடத்தை பேசுகையில் சபரிநாதன் தான் இருப்பார் என்று கூறப்படுகிறது, அதேபோல் அரோரா மற்றும் விக்ரம் அடுத்தடுத்த இடங்களிலும் இருப்பார்கள் என்று தெரிகிறது.

இந்நிலையில் நாளை அதாவது ஜனவரி 18 ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு நிகழப்போக்கும் பிரம்மாண்ட இறுதிப்போட்டியில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, வெற்றியாளரை அறிவிப்பார். பிக் பாஸ் தமிழ் சீசன் 9ல் யார் வெற்றி பெறப்போகிறாரோ அந்த நபருக்கு ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசும், பிக் பாஸ் கோப்பையும் வழங்கப்படும். ரசிகர்கள் இந்த ஒளிபரப்பை அதிகாரப்பூர்வ Vijay TV தொலைக்காட்சி சேனலிலும், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் நேரலையில் காணலாம். ரசிகர்களின் ஆதரவு யாருக்கு என்பதைப் பொறுத்தே இந்த சீசனின் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார் என்பதால், இறுதி நிமிடம் வரை பரபரப்பிற்குப் பஞ்சமிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பொங்கல் 2026 : சினிமா பிரபலங்களின் வீட்டில் பொங்கல் எப்படி பொங்குச்சு? இதோ வைரல் போட்டோக்கள்..

மேலும் படிக்க | தனுஷ்-மிருணாள் தாகூர் விரைவில் திருமணம்? எப்போது தெரியுமா? தேதியெல்லாம் குறிச்சாச்சு..

மேலும் படிக்க | பிக்பாஸ் 9 : இறுதிப்போட்டி நடக்கும் சமயத்தில் செம ட்விஸ்ட்! புதிதாக நுழைந்த 2 பிரபலங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News