)
Bison Vs Dude Vs Diesel Box Office Collection : தீபாவளி 2025 பண்டிகையை முன்னிட்டு, இந்த வரும் பைசன், ட்யூட், டீசல் என மூன்று திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வழக்கமாக, பெரிய ஹீரோக்களின் படங்கள்தான், தீபாவளிக்கு வெளியவரும். ஆனால், இம்முறை புதுமையாக இளம் ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அவற்றில், எது ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது, எது நல்ல வசூலை பெற்றுள்ளது என்பதை இங்கு பார்ப்போம்.
தீபாவளிக்கு ரிலீஸான மூன்பு படங்கள்:
இம்முறை, தீபாவளி ரேசில் இளம் ஹீரோக்களான துருவ் விக்ரம், ஹரிஷ் கல்யாண், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோர் இணைந்தனர். இவர்கள் நடித்த படங்களில் டிரைலர் வெளியான போது, ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுத்தனர். அதே நம்பிக்கையில் தீபாவளியை முன்னிட்டு, கடந்த 17ஆம் தேதி படங்களும் வெளியாகின.
பைசன்:
பைசன் திரைப்படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். மணத்தி கணேசன் என்கிற தேசிய கபடி வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து, இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை, மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார். இதில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார்.
இந்த படம், ஆழமான கதையுடன் இருப்பதால், ரசிகர்கள் இப்படத்திற்கு மிகுந்த ஆதரவு கொடுத்துள்ளனர். படத்தொகுப்பு மற்றும் காட்சியமைப்பும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ட்யூட்:
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், கீர்த்தீஸ்வரன் இயக்கயிருக்கும் படம், ட்யூட். இந்த படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருக்கிறார். கூடவே முக்கிய கதாப்பாத்திரத்தில் சரத்குமார், நேஹா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
வித்தியாசமான கதைக்களத்துடன் இருக்கும் இந்த படத்திற்கு இளசுகள் பலர் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர். பிரதீப்பின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது. இது, சாய் அப்யங்கர் இசையமைத்திருக்கும் முதல் படமாகும். எனவே, அவரது இசைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
டீசல்:
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம், டீசல். இந்த படத்தை, ஷன்முகம் முத்துசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில், ஹரிஷ் கல்யாணிற்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார். படம் வெளியாவதற்கு முன்னரே, படத்தின் ‘பீர் சாங்’ பெரிய ட்ரெண்ட் ஆனது, படத்திற்கு ப்ரமோஷனாக அமைந்தது.
படம், ரசிகர்கள் மத்தியில் ‘சுமார்’ என்கிற விமர்சனத்தை பெற்றுள்ளது. இருப்பினும் நடிப்பிறாக ஹரிஷ் கல்யாண் மற்றும் அதுல்யாவிற்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
மூன்றில் எது ஓகே?
மேற்குறிப்பிட்ட மூன்று படங்களில் பைசன் படம், கதையாக வெற்றிபெற்று விட்டதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்து வருகின்றனர். அதே போல, ட்யூட் படம், கமர்ஷியலாக வெற்றி பெறும் என்றும், டீசல் திரைப்படமும் ஓரளவிற்கு போட்ட பட்ஜெட்டை எடுத்துவிடும் என்பதும் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. இருப்பினும் பொருத்திருந்துதான் எந்த படம் வெற்றி பெற்றது என்பதை பார்க்க வேண்டும்.
வசூலில் யார் டாப்?
பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தின் படி, ட்யூட் திரைப்படம், முதல் இரண்டு நாட்களில் ரூ.10 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. அதே போல, பைசன் திரைபடம் சுமார் ரூ.2.5 கோடி வசூலித்திருப்பதாகவும், டீசல் திரைப்படம், சுமார் ரூ.20 லட்சம் வரை வசூலித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. போகப்போக இந்த வசூல் விவரங்கள் மாறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ