கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரவி மோகன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ் குமாரின் 'பிளாக்மெயில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
'இரவுக்கு ஆயிரம் கண்கள்' மற்றும் 'கண்ணை நம்பாதே' போன்ற மிஸ்ட்ரி த்ரில்லர் படங்களை இயக்கிய இயக்குநர் மு. மாறனுடன் ஜி.வி. பிரகாஷ் குமார் வைத்து பிளாக்மெயில் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் கீழ் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதற்காக நடிகர்கள் ரவி மோகன் மற்றும் விஜய் சேதுபதி இருவருக்கும் படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. மேலும், முதல் பார்வைக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பிற்காக பத்திரிகை ஊடகங்கள் மற்றும் ரசிகர்ளுக்கும் படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.
Happy to launch the first look poster of @jds_filmfactory First feature film, ‘BLACKMAIL’ directed by @mumaran1#jdsfilmfactory #blackmailFirstLook @gvprakash @teju_ashwini_ @Act_Srikanth @thebindumadhavi @linga_offcl @thilak_ramesh @ActorMuthukumar @SamCSmusic @Sanlokesh pic.twitter.com/IHF4UTXpGc
— Ravi Mohan (@iam_RaviMohan) March 29, 2025
மர்ம பின்னணியில் ஜி.வி. பிரகாஷ்குமார் இருக்கும்படியான முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படம் மே 2025 ஆம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக தேஜு அஸ்வினி நடிக்கிறார். மேலும் ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, லிங்கா, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
GV.Prakash in #BlackMail First Look pic.twitter.com/EeEFq54422
— Mohan Raj (@MohanRa26189759) March 30, 2025
Happy to launch the first look poster of @jds_filmfactory First feature film, ‘BLACKMAIL’ directed by @mumaran1#jdsfilmfactory #blackmailFirstLook @gvprakash @teju_ashwini_ @Act_Srikanth @thebindumadhavi @linga_offcl @thilak_ramesh@linga_offcl @ActorMuthukumar @SamCSmusic… pic.twitter.com/phkO5zllij
— VijaySethupathi (@VijaySethuOffl) March 29, 2025
தொழில்நுட்ப குழு:
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்.,
ஒளிப்பதிவு: கோகுல் பெனோய்,
படத்தொகுப்பு: சான் லோகேஷ்,
கலை: எஸ்.ஜே. ராம்,
ஆடை வடிவமைப்பு: ஆர். திலகப்ரியா சண்முகம் மற்றும் வினோத் சுந்தர், ஸ்டண்ட் மாஸ்டர்: ராஜசேகர்,
ஒப்பனை: சசிகுமார் பரசிவம், தயாரிப்பு வடிவம் அமைப்பாளர்: தயாளன் பழனி,
தயாரிப்பு நிர்வாகி: ஆர்.இ. ராஜேந்திரன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-அப்துல் நாசர்,
பப்ளிசிட்டி டிசைன்ஸ்: அமுதன் பிரியன்.
மேலும் படிக்க| பஹத் பாசில் - வடிவேலு இணைந்து மிரட்டும் 'மாரீசன்'! ரிலீஸ் தேதி இதுதான்!
மேலும் படிக்க| ஹரிஷ் கல்யாணின் 'டீசல்' படம் எப்படி இருக்கு? வெற்றிமாறன் என்ன சொல்கிறார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









