)
Dharmendra Passes Away : பாலிவுட் திரையுலகை சேர்ந்த சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் ஒருவர், தர்மேந்திரா. இவர், சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களுக்கு பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இவர், உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தர்மேந்திரா உயிரிழப்பு:
பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் தர்மேந்திரா, இந்த மாதத்தின் தொடக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு தொடர்பான பிரச்சனைகள் இவருக்கு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த நவம்பர் 11ஆம் தேதியன்று இவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இது, பொய் செய்தி என்று குடும்பத்தினரால் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் தர்மேந்திராவின் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் வந்துள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் ஒவ்வொருவராக வந்து தர்மேந்திராவை பார்த்து சென்றனர்.
இப்போது 89 வயதான தர்மேந்திரா உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இருப்பினும், குடும்பத்தினர் இது குறித்த எந்த தகவலையும் இன்னும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்ததாக பொய் செய்தி:
நடிகர் தர்மேந்திரா, மருத்துவமனையில் இருந்த போது, அவர் உயிரிழந்ததாக தகவல்கள் பரவியது. இதனை, நம்பகமான பல செய்தி சேனல்கள், தலைப்பு செய்திகள் ஆக்கின. ஆனால், இதற்கு சில மணி நேரங்களிலேயே, இந்த செய்தி பொய் என்றும், சிகிச்சையில் இருப்பவரை எப்படி உயிரிழந்ததாக செய்தியாக்கலாம் என்றும் அவரது குடும்பத்தினர் கொந்தளித்தனர். பின்னர், இந்த இறப்பு செய்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இப்போது அவர் உண்மையாகவே உயிரிழந்திருக்கிறார்.
யார் இந்த தர்மேந்திரா?
தர்மேந்திரா என்று அழைக்கப்படும் தரம் சிங் தியோல் இந்திய சினிமாவில் ஒரு புகழ்பெற்ற நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். 'பாலிவுட்டின் ஹீ-மேன்' (He-Man) என்று இவரை செல்லமாக பலர் அழைப்பதுண்டு. 1997 ஆம் ஆண்டில், இந்தி சினிமாவுக்கு இவர் செய்த அர்ப்பணிப்பிற்காக பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுள்ளார். ஷோலே திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பெரும்புள்ளியாக இருந்தார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் பெயர், பிரகாஷ் கவுர். 19வயதாக இருக்கும் போதே இருவருக்கும் திருமணம் ஆனது. இரண்டாவது மனைவியின் பெயர், ஹேமமாலினி. இவர்கள் இருவருக்கும் 1980ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. தர்மேந்திராவிற்கு 6 பிள்ளைகள் உள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ