அஜித் குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்ப நாயுடன் விரைந்த காவல் துறையினர்..

Ajith Kumar House Bomb Threat : சென்னை இசிஆர் சாலையில் உள்ள பிரபல நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.

Written by - Yuvashree | Last Updated : Nov 11, 2025, 04:44 PM IST
  • அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
  • காவல் அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சல்
  • என்ன நடந்தது? முழு விவரம்!
அஜித் குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்ப நாயுடன் விரைந்த காவல் துறையினர்..

Ajith Kumar House Bomb Threat : நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து தற்பொழுது மோப்ப நாயுடன் மூன்று வெடிகுண்டு நிபுணர்கள் ஈசிஆர் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

Add Zee News as a Preferred Source

அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை திருவான்மியூரில் பிரபல நடிகர் அஜித்குமாருக்கு சொந்தமான வீடு உள்ளது. தற்போது திருவான்மியூர் வீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் ஈஞ்சம்பாக்கத்தில் கடந்த 5 வருடத்திற்கும் மேலாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

தற்போது நடிகர் அஜித்குமார் பைஜன் நாட்டில் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் தமிழக காவல் துறை தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மெயில் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து சென்னை வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பிரபல நடிகர் அஜித்குமார் வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரபல நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த மெயில் எங்கிருந்து வந்தது,யார் அனுப்பினார்கள் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக கட்சியின் தலைவர்கள் வீடு,நடிகர்கள் வீடு,தனியார் பள்ளிகள்,கோவில்கள் போன்ற இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | விஜய் வீட்டில் பாம்...? சென்னையில் ஒருவர் கைது - மிரட்டலுக்கு அவர் சொன்ன காரணம் என்ன?

மேலும் படிக்க | ஸ்டாலின், ஆளுநர், திரிஷா வீடுகளில் சோதனை - வெடிகுண்டு மிரட்டல்... சென்னையில் பரபரப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News