புது டெல்லி: பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து உருவான ‘பி.எம். நரேந்திரமோடி’ என்ற படம் கடந்த மே 24 ஆம் தேதி திரைக்கு வந்தது. இதில் மோடி வேடத்தில் நடிகட் விவேக் ஓபராய் நடித்துள்ளார். ஓமங்க் குமார் இயக்கி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படத்தை கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு ஆதரவு அலையை படம் உருவாக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்து படத்தை வெளியிடக்கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளும், ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் புகார் அளித்தனர்.


இதைத்தொடர்ந்து தேர்தல் முடிவு அறிவிக்கும் வரை  ‘பி.எம். நரேந்திரமோடி’ படம் வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் படக்குழுவினரிடம் கூறியது. இதனையடுத்து மே 24 ஆம் தேதி ‘‘பி.எம். நரேந்திரமோடி’’ படத்தை வெளியிட படத்தின் தயாரிப்பாளர் சந்தீப்சிங் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி உலக முழுவதும் திரைக்கு வந்தது ‘பி.எம். நரேந்திரமோடி’. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. கடந்த மூன்று நாட்களில் எவ்வளவு வசூல் ஆனது என்று பார்ப்போம்.


வெளிக்கிழமை: 2.88 கோடி; சனிக்கிழமை 3.76 கோடி, ஞாயிற்றுக்கிழமை 5.12 கோடி என இந்தியாவில் மொத்தம் 11.76 கோடி வசூல் செய்துள்ளது.