பிரபல கிராமிய பாடகி விமான விபத்தில் பரிதாபமாக பலி!
மரிலியா மென்டோன்கா (26) பிரேசில் நாட்டின் பிரபல பாடகி மற்றும் பாடலாசிரியர் விமான விபத்தில் பரிதாபமாக பலி.
மரிலியா மென்டோன்கா (26) பிரேசில் நாட்டின் பிரபல பாடகி மற்றும் பாடலாசிரியர் ஆவார். 2016-ம் ஆண்டு "Infiel" என்ற தலைப்பில் இவர் வெளியிட்ட பாடல் பிரேசில் எங்கும் ஒலித்து இவரது பெருமையை நிலைநாட்டியது.மேலும் 2017-ம் ஆண்டு வெளியான இவரது இரண்டாவது ஆல்பம் "Realidade" இவருக்கு லத்தீன் கிராமிய விருதினை பெற்று தந்தது . மேலும் இவர் வாழ்க்கையை இழந்து நிர்கதியாய் நிற்கும் பெண்களுக்கு பல நன்மைகளை செய்ததன் மூலம் இவர் அந்த நாட்டின் 'துன்பங்களின் ராணி' என்று அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இவரது நாட்டுப்புற பாடலுக்கு ஏராளமான ரசிகர்கள் அடிமை.
மக்களை வாட்டி வதைத்த கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக இவரது இசை கச்சேரிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.இருப்பினும் யூடியூப் வழியாக நேரலையில் இசை கச்சேரிகளை நடத்தி,அந்த நிகழ்ச்சி 33 லட்சம் பார்வையாளர்களை கடந்தது. இது தான் உலகின் நேரலையில் அதிகம்பேரால் கண்டுகளிக்கப்பட்ட இசை நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் நேற்று முன்தினம் மினாஸ் ஜெரைஸ் என்ற மாகாணத்தில் உள்ள கரட்டிங்கா என்ற பகுதியில் இசைக்கச்சேரி ஒன்றை நடத்துவதற்காக விமானத்தில் அவரும், அவருடைய உறவி, தயாரிப்பாளரும்,மற்றும் 2 பணியாளர்களுடன் பயணம் மேற்கொண்டனர்.
ஆனால் திடீரென்று எதிர்பாராதவிதமாக அவர் கச்சேரி நடத்தும் இடமான 'கரட்டிங்கா' என்ற இடத்தை அடைவதற்கு முன்னதாகவே ஏறத்தாழ 12 km தூரத்தில் விமானம் விபத்திற்குள்ளானது. இந்த அசம்பாவிதத்தில் இந்த இளம் வயதிலேயே அவரது உயிர் பரிதாபமாக போனது.அவரோடு சேர்த்து உடன் பயணித்தவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர் . இந்நிலையில் பரிதாபமாக இறந்த பாடகி மரிலியாவுக்கு 2 வயதில் 'லியோ' என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இவரின் மறைவு பல தரப்பினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் குழுமினர்.
ALSO READ பாகிஸ்தானின் விநோத சட்டங்கள்; மக்கள் எப்படித் தான் வாழ்கிறார்களோ..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR