CBFC New Rules : இந்தியாவை பொறுத்தவரையில், எந்த மொழிப்படம் வெளியாக வேண்டும் என்றாலும், சென்சார் போர்டிடம் இருந்து தணிக்கை செய்யப்பட்டு, சான்றிதழ் பெற்ற பிறகுதான் ரிலீஸ் ஆக வேண்டும் என்கிற விதிமுறை உள்ளது. இதையடுத்து, தணிக்கை நிர்வாகம் புதிதாக சில விதிமுறைகளை அமல்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
சென்சார் போர்ட்:
படத்தை தணிக்கை செய்யும் சென்சார் வாரியத்தை ஆங்கிலத்தில் Censor Board Of Film Certification என்று கூறுவர். இது, இந்திய அரசாங்கத்தின் தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறையாகும். இந்திய மொழிகளில் வெளியாகும் எந்த படமாக இருந்தாலும், மாற்று மொழியில் உருவாகி இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து படங்களும் சென்சார் வாரியத்திடம் இருந்து தகுந்த தணிக்கை சான்றிதழ் பெற்ற பிறகுதான், ரிலீஸ் செய்யப்படும். படங்களுக்கென்று, சட்டத்தில் இருக்கும் விதிமுறைகளை படத்தில் மீறியிருந்தால், அதற்கு ஏற்ப படக்குழுவிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்குறிய காரணங்கள் கேட்க்கப்பட்ட பின்பு தணிக்கை சான்றிதழ்கள் வழங்கப்படும்.
புது ரூல்ஸ்..
சென்சார் போர்ட், தற்போது புது விதிமுறைகளை அமல்படுத்திதயுள்ளது. வரும் மார்ச் 15 முதல் சென்சார் வாரியத்திடம் சமர்ப்பிக்கப்படும் அனைத்து படங்களுக்கும், வசன வரிகள் (Subtitles) மற்றும் ஒலி விளக்கம் (Audio Descriptions) இருக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் இது பொருந்தும். இந்த விதிமுறைகள், செவி திறன் குறைபாடு இருப்பவர்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. செவி திறன் குறைபாடு மற்றும் பார்வைத்திறன் குறைபாடு இருப்பவர்கள், படங்களை தியேட்டரில் பார்க்க சிரமப்படுவதால் இந்த வசதியானது கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், அனைவரும் சரிசமமாக படத்தை தியேட்டரில் பார்க்கலாம் என்ற நோக்குடன் இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், படத்தில் காது கேளாதவர்களுக்கு
பட தயாரிப்பு குழுவிற்கு தலைவலியா?
சென்சார் வாரியத்தின் இந்த புது விதிமுறைகள், பலர் மத்தியில் வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்த முறை, ஏற்கனவே வெளிநாடுகளில் பின்பற்றப்படு வருவதால் இதனை இந்தியாவில் கொண்டு வந்ததற்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், சினிமா ரசிகர்களிடையே இது விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
ஒரு சிலர், படத்தை தியேட்டரில் பார்க்கும் அனுபவத்தை இது சீர்குலைக்கும் என்றும், சப்டைட்டில்ஸ் போடுவதால் படத்தை நிம்மதியாக பார்க்க முடியாது என்றும் கருதுகின்றனர். அதே சமயத்தில் இது படத்தை தயாரிக்கும் குழுவிற்கும் தலைவலியான விஷயமாக அமையும் என்பது, பலரது கருத்தாக இருக்கிறது.
என்னதான் வழி?
சினிமா ரசிகர்கள், ஒரு சில தியேட்டர்களில் மட்டும் இந்த சப்டைட்டில் வைக்கும் ஸ்கிரீனிங்கை வைப்பது, அனைவருக்கும் சரியானதாக இருக்கும் என்று கூறுகின்றனர். அப்படி இருக்கும் பட்சத்தில், அனைத்து தரப்பு மக்களும் சமநிலையுடன் படத்தை பார்க்க முடியும் என்றும் கூறி வருகின்றனர்.
சென்சார் சான்றிதழ் பிரச்சனை:
பல வாரங்கள் கடந்தும், சென்சார் சான்றிதழ் இன்னும் வழங்கப்படாததால், ஜனநாயகன் திரைப்படம் திரையிடப்படாமல் இருக்கிறது. விஜய்யின் கடைசி படமான இது, ஜனவரி 9ஆம் தேதியே திரைக்கு வரவேண்டியதாக இருந்தது. ஆனால், படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் என்று சென்சார் வாரியம் கடைசி நேரத்தில் கூறியதை அடுத்து படக்குழு கோர்டிற்கு சென்றது. சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தை அடைந்த இந்த படத்தின் வழக்கு, கடைசியில் கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தால் வாபஸ் பெறப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. மறு தணிக்கைக்காக படத்தை ஸ்கிரீன் செய்ய படக்குழு தயாராக இருக்கும் போதும், ஒரு நாள் படத்தை திரையிடலுக்கு அனுமதித்து, பின்பு “படத்தை பார்க்க வேண்டிய சென்சார் குழுவை சேர்ந்த நபர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை” என்று கூறி, அந்த திரையிடல் கேன்சல் செய்யப்பட்டது.
அதே போல, சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திலும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. சமீபத்தில் வரலட்சுமியின் படத்தின் பெயர் கூட, சென்சார் நிர்வாகம் பிரச்சனை வரும் என்று கூறியதால் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஜனநாயகன் படத்திற்கு அமேசான் வைத்த ஆப்பு! ஓடிடியிலும் வெளியாகாதா? என்ன விவரம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









