வில்லன் கதாபாத்திரத்தில் சேரன்! எப்படி இருக்கிறது நரிவேட்டை? திரை விமர்சனம்!

டொவினோ தாமஸ் மற்றும் சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நரி வேட்டை திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் திரைவிமர்சனத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - RK Spark | Last Updated : May 24, 2025, 12:40 PM IST
  • சேரன் நடித்துள்ள மலையாள படம்.
  • வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
  • திரை விமர்சனத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
வில்லன் கதாபாத்திரத்தில் சேரன்! எப்படி இருக்கிறது நரிவேட்டை? திரை விமர்சனம்!

அனுராஜ் மனோகர் இயக்கத்தில் சேரன் மற்றும் டொவினோ தாமஸ் நடித்துள்ள நரி வேட்டை படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மலையாள மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் இந்த படம் உருவாகியுள்ளது. இந்தியன் சினிமா கம்பெனி சார்பில் திப்பு ஷான் மற்றும் ஷியாஸ் ஹாசன் இந்த படத்தை தயாரித்துள்ளனர். அபின் ஜோசஃப் திரைக்கதை எழுத, ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். விஜய் ஒளிப்பதிவு செய்ய, சண்டை காட்சிகளை ஃபீனிக்ஸ் பிரபு, அஷ்ரஃப் குருக்கள் படமாக்கி உள்ளனர். மேலும் இந்த படத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு, சேரன், பிரியம்வதா கிருஷ்ணன், ஆர்யா சலீம், பிரசாந்த் மாதவன், ப்ரணவ் தியோஃபைன், நந்து, கிருஷ்ணன் பாலகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு போலீஸ் திரில்லராக உருவாகி உள்ள இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது.

மேலும் படிக்க | ரஜினியின் ‘கூலி’ படம் ரிலீஸ் தேதி.. படக்குழு வெளியிட்ட அப்டேட்

படத்தின் கதை

கேரளாவில் வசித்து வரும் டொவினோ தாமஸ் தான் படித்த படிப்பிற்கு ஏற்றவாறு வேலை கிடைத்தால் தான் வேலைக்கு செல்வேன் என்று உறுதியுடன் தன் அம்மாவுடன் வசித்து வருகிறார். ஒரு நேர சாப்பாட்டிற்கே சிரமப்பட்டு வந்தாலும் நல்ல வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் வேலை டொவினோ தாமஸ்க்கு கிடைக்கிறது. பிடிக்கும் பிடிக்காமல் இந்த வேலைக்கு செல்கிறார். மலைவாழ் மக்கள் தங்களுக்கு இடம் வேண்டும் என்று வயநாட்டில் பிரச்சனை செய்கின்றனர். அவர்களை விரட்டி அடிக்க போலீஸ் படை செல்கிறது. அதில் டொவினோ தாமஸ்ம் செல்கிறார். அங்கு நடக்கும் சில விஷயங்களால் டொவினோ தாமஸ் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களே நரி வேட்டை படத்தின் கதை.

சமீப நாட்களாக டொவினோ தாமஸ் தேர்ந்தெடுக்கும் கதைகள் மிகவும் வித்தியாசமாகவும் அதே சமயம் மக்களுக்கு ரசிக்கும் படியும் உள்ளது. இந்த படத்திலும் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில் வேண்டாவிருப்பாக போலீஸ் வேலையை செய்து வருவதும், பின்பு அதற்காக தன்னை மாற்றிக் கொள்வதும் என தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மற்றொரு போலீஸ் அதிகாரியாக வரும் சுராஜ் மீண்டும் தனது நடிப்பால் அசத்தியுள்ளார். சிறிது காட்சிகளே வந்தாலும் மனதில் பதியும்படியான ஒரு கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார் சுராஜ். இவர்களை தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரத்தில் சேரன் நடித்துள்ளார். இதுவரை அவர் நடித்திராத வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருப்பினும் ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கான பாடி லாங்குவேஜ், ஒரு மிரட்டலான தோணியும் அவரிடம் இல்லை. இது அந்த கதாபாத்திரத்தை வலுவிழக்க செய்கிறது.

மலைவாழ் மக்கள் தங்களுக்கு வேண்டிய உரிமைகளை பெற என்னென்ன சிரமங்களை மேற்கொள்கின்றனர் என்பதை இந்த படத்தின் மூலம் சொல்ல வருகிறார் இயக்குனர். அதே சமயம் காவல்துறை பொதுமக்களின் மீது எந்த அளவிற்கு தங்களது காட்டுமிராண்டித்தனத்தை காட்டுகிறது என்பதையும் ஆணித்தனமாக எடுத்துக் கூறுகிறார். ஒரு சில காட்சிகளை பார்க்கும்போது பதபதைக்க வைக்கிறது. படத்தின் பாதி காட்சிகள் காட்டுக்குள் நடைபெற்றாலும் அதனை கேமராவின் மூலம் சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார் விஜய்.

ஃபீனிக்ஸ் பிரபு, அஷ்ரஃப் குருக்கள் சண்டை காட்சிகள் நன்றாக இருந்தது. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் சற்று குறைந்தது, ஒரே இடத்தை சுற்றி படம் நகர்வது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. படத்தின் எடிட்டிங் பெரிய பிரச்சினையாக இருந்தது, சில காட்சிகளை முன்பே சொல்லி விடுவதால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது புரிந்து விடுகிறது. சேரன் கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை நடிக்க வைத்திருந்தால் இன்னும் நன்றாக படமாக வந்திருக்கும், அதே போல திரைக்கதையிலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். அதே போல படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக்குகளும் உள்ளன.

மேலும் படிக்க | கூலி படத்திற்காக ரூ. 280 கோடி சம்பளம் வாங்கிய ரஜினி? லோகேஷ் சம்பளம் எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News