Child Actor Kamalesh Acting In Jason Sanjay Movie : புதுமுக இயக்குநரும், நடிகர் விஜய்யின் மகனுமான ஜேசன் சஞ்சய் புதிதாக ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில், இணைந்துள்ள ஒரு புது பிரபலம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
ஜேசன் சஞ்சய் படம்..
பிரபல நடிகர்கள் அல்லது இயக்குனர்களின் வாரிசுகள் திரையுலகில் கொண்டு வருவது சகஜம். அப்படி சமீபத்தில் இயக்குனராக மாறி இருப்பவர் நடிகர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய். 24 வயதாகும் இவர், சென்னையில் முதலில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, வெளிநாட்டில் சினிமா குறித்த பட்டப்படிப்பை பயின்றார். இதற்கு முன்னர், சில குறும்படத்தையும் எடுத்திருக்கிறார்.
ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கதையை சொன்னவுடன், அந்த நிறுவனம் ஓகே சொன்னதாகவும், அதன் பிறகு ப்ரொடக்ஷன் வேலைகள் ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், நடிகர்கள் சரியாக கிடைக்காததாலும், வேறு சில பொருளாதார பிரச்சனைகளாலும் இந்த படத்தின் பணிகள் தாமதமானதாகவும் கூறப்படுகிறது.
ஹீரோ..
ஜேசன் படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற குழப்பம் எழுந்தது. துருவ் விக்ரம் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர், ஹீரோவின் பெயராக அடிப்பட்டது. ஆனால் கடைசியல் கிஷன் தாஸ் இதில் ஹீரோவாக நடித்து வருகிறார். படத்தின் கதையை, தன்னிடம் 2 மணி நேரம் வந்து ஜேசன் சஞ்சய் சொன்னதாகவும், தான் அந்த கதையை கேட்டு இம்ப்ரெஸ் ஆனதாகவும் கூறியிருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பித்தது. இதன் ஷூட்டிங் தற்போது முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது.
புதிதாக இணைந்த நடிகர்..
ஜேசன் சஞ்சயின் படத்தில் புதிதாக ஒரு குட்டி நடிகரும் இணைந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா? சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் வந்து கலக்கிய கமலேஷ்தான். இவர், முதலில் ராட்சசி படத்தில் ஜோதிகாவை சைட் அடிக்கும் குட்டி பையனாக நடித்திருந்தார். இதில் அவர், “நான் உங்கள பொண்ணு பார்க்க வரட்டுமா டீச்சர்?” என்று கேட்பார். இவர், தற்போது ஜேசன் சஞ்சயின் முதல் படத்திலும் இணைந்திருக்கிறார்.
இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலை கொடுத்திருக்கிறார். அதில், தான் ஜேசனின் படத்தில் நடிப்பதை கூறியிருக்கிறார். மேலும், தான் படத்தில் நடிக்க வந்த 3 நாட்களில் ஜேசனிடம் 50 கேள்விகள் கேட்டதாகவும் அதில் எதற்குமே அவர் கோபப்பட்டதில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும், ஒரு நாளும் செட்டில் அவர் கோபப்பட்டு கத்தியதில்லை என்றும், எதுவாக இருந்தாலும் அனைத்தையும் அவர் கூலுாக ஹேண்டில் செய்வார் என்றும் அந்த குட்டி பையன் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க | இது விஜய்யா? அவரது மகனா? வித்தியாசமே தெரியல! ஜேசன் சஞ்சயின் ரீசண்ட் போட்டோஸ்!
மேலும் படிக்க | விஜய் மகனுக்கு அட்வைஸ் செய்த அஜித்! என்ன சாென்னார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









