கரூரில் திரண்ட சீயான் விக்ரம் ரசிகர்கள்: வீர தீர சூரன் 2 படக் கொண்டாட்டம்

'சீயான்' விக்ரம் ரசிகர்களால் ஸ்தம்பித்த கரூர், ஆயிரக்கணக்கில் திரண்ட ரசிகர்கள்!!

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 1, 2025, 07:35 PM IST
  • சீயான் விக்ரம் நடிப்பில், 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படம்.
  • தமிழகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
கரூரில் திரண்ட சீயான் விக்ரம் ரசிகர்கள்: வீர தீர சூரன் 2 படக் கொண்டாட்டம்

சீயான் விக்ரம் நடிப்பில், 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படம், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுக்க, ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் சீயான் விக்ரம். இதன் ஒரு பகுதியாக கரூர் சென்றபோது, ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூட, மொத்தப் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது. ரசிகர்களின் உற்சாக வரவேற்பில், மனம் நெகிழ்ந்த சீயான் விக்ரம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 

Add Zee News as a Preferred Source

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படம் கடந்த வாரம் வெளியான நிலையில், தமிழகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்துள்ளது.

படத்தினைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினருடன் இணைந்து தமிழகமெங்கும் பல நகரங்களுக்குச் சென்று, ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் சீயான் விக்ரம். 

இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் கரூர் சென்ற நிலையில், சீயான் வந்திருப்பது அறிந்து, பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர். அந்த மொத்த இடமும், நகர இடமில்லாத அளவு ஸ்தம்பித்துப் போனது, காவல் துறையினர் உதவியுடன், ரசிகர்களை சந்தித்து அவர்களின் உற்சாக வரவேற்பிற்கு நன்றி தெரிவித்தார் சீயான் விக்ரம். 

ஆயிரக்கணக்கில் கூடிய ரசிகர்களின் உற்சாக வீடியோ, இப்போது இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து, வீர தீரன் படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

மக்களின் பெரும் வரவேற்பில், உலகமெங்கும் 'வீர தீர சூரன் பார்ட் 2 ' அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வீர தீர சூரன் பாகம் 2 கதை:

மதுரை ஊர்த்திருவிழாவில் இரு பெருந்தலைகளுக்குள் சண்டை மாள்கிறாது. இதனை காரணமாக வைத்து, இவரை போட்டுத்தள்ள நினைக்கிறார் அந்த உரின் எஸ்.பி எஸ்.ஜே.சூர்யா. சண்டையிட்ட பெருந்தலைகளுள் ஒருவர், தன்னை காப்பாற்றுமாறு மளிகை கடை வைத்திருக்கும் விக்ரமின் உதவியை நாடுகிறார். பெரிய தலைவராக இருக்கும் ஒருவர், சாதாரண மளிகை கடை வியாபாரியான விக்ரமின் உதவியை நாடுவது ஏன்? அவருக்கு பின்னால் இருக்கும் ஃப்ளேஷ்பேக் என்ன என்பதை வைத்து படம் நகர்கிறது.

மிரட்டலான பின்னணி இசை!

படத்தில் பல காட்சிகளில், பின்னணி இசையே பேசுகிறது. ஜி.வி.பிரகாஷின் இசையே காட்சிகளை வேகமாக நகர்த்துகிறது. பாடல்கள் கொஞ்சம் வேகத்தடையாக இருக்கிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் மனதில் நிற்கிறது. முதல் பாதியில் திரைக்கதையில் இருக்கும் வேகம், இரண்டாம் பாதியில் பெரிதாக தெரியவில்லை. ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் எடிட்டிங் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம்.  துப்பாக்கி சூடு காட்சி, கார் வெடித்து சிதறும் காட்சி ஆகியவற்றிற்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

மேலும் படிக்க| பஹத் பாசில் - வடிவேலு இணைந்து மிரட்டும் 'மாரீசன்'! ரிலீஸ் தேதி இதுதான்!

மேலும் படிக்க| ஹரிஷ் கல்யாணின் 'டீசல்' படம் எப்படி இருக்கு? வெற்றிமாறன் என்ன சொல்கிறார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News