)
நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ஆண்பாவம் பொல்லாதது திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த திரைப்படம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சத்தியபாமா சினிமாஸ் திரையரங்கில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்பட குழுவினர் இன்று இரவு திரைப்படத்திற்கு இடையே ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
இதனை தொடர்ந்து நடிகர் ரியோ ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிறைய திரையரங்குகளுக்கு சென்று பார்த்து வருகிறோம். ஹவுஸ்புல் காட்சிகளாக திரையரங்குகளில் ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கோவில்பட்டியில் மிகப்பெரிய ஸ்கிரீனில் பொதுமக்கள் படம் பார்த்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து திரையரங்குகளில் படம் பார்த்து வரும் மக்களுக்கு நன்றி.
சினிமாத்துறை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் திரையரங்குகளில் படம் நன்றாக ஓட வேண்டும். மக்கள் அப்படி எங்கள் படத்திற்கு வருவது எங்களது திரைப்பட குழுவிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
இதேபோன்று நல்ல கதைக்களத்துடன் அடுத்தடுத்து திரைப்படத்தில் நடிப்பேன். மக்களின் ரசனை மாறிக்கொண்டே இருக்கிறது என்பதைவிட அப்டேட் ஆகிக்கொண்டிருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி நாங்களும் மாற்றிக் கொண்டு வருகிறோம் என்றார்.
சமீபத்தில் நடிகர் அஜித் குமார் ரசிகர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் திரையரங்குகளில் பொருட்களை சேதப்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து கேட்டதற்கு சினிமா என்பது ஒரு கொண்டாட்டமாக இருக்க வேண்டும். கொண்டாட்டம் கொஞ்சம் தடம் மாறும் போது அது கலவரமாக மாறுகிறது. ஒரு திரையரங்கில் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சந்தோசமாக பார்த்துவிட்டு சென்றால் அடுத்தடுத்து ரசிகர்கள் வந்து கொண்டாடுவார்கள். சினிமாவை கொண்டாட வேண்டும் என்றுதான் அவரும் (நடிகர் அஜித்குமார்) தெரிவித்துள்ளார். அதைத்தான் நாங்களும் பின்பற்றுகிறோம் என்றார்.
3 நாட்களில் ஆண்பாவம் பொல்லாதது படம் செய்துள்ள வசூல்
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'ஆண்பாவம் பொல்லாதது' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், அதன் முதல் 3 நாட்களுக்கான வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ