)
Madhampatty Rangaraj With First Wife Shruthi: மாதம்பட்டி ரங்கராஜ் என்ற பெயரை நிச்சயம் தமிழ்நாட்டில் சிறியவர் முதல் முதியவர்கள் வரை கேள்விப்பட்டிருப்பார்கள்.
கடந்த சில வாரங்களாகவே பேஸ்புக், இன்ஸ்டா, X, யூ-ட்யூப் என சமூக வலைதளங்கள் தொடங்கி செய்தி சேனல்கள் என திரும்பிய பக்கமெல்லாம் இவர் குறித்த பேச்சுகள்தான் நிரம்பி வழிந்தது. அதற்கு கடந்த சில நாள்களாக குட்டி பிரேக் போடப்பட்ட நிலையில், இன்று மீண்டும் நெட்டிசன்களிடம் வசமாக சிக்கியிருக்கிறார் என சொல்லலாம்.
மாதம்பட்டி ரங்கராஜ் இந்த திருமண சர்ச்சைகள் நடப்பதற்கு முன்பே பலராலும் அறியப்பட்டவர்தான். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சமையல் கலை நிபுணர்களில் இவருக்கு தனி இடம் உண்டு எனலாம். சினிமா வட்டாரம் தொடங்கி உயர் வட்டாரங்களில் நடக்கும் நல்ல காரியங்களுக்கு இவரின் சமையல்தான்... இவர் சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார்.
மெகந்தி சர்கஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். கிர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருப்பினும் அதன்பின் இவர் சமையல் சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை பெறவே வெள்ளித்திரை போல் சின்னத்திரையும் இவரது முகத்தை மக்களுக்கு மேலும் நெருக்கமாக்கியது. சமையல் நிகழ்ச்சியில் இவரை நடுவராக கொண்டுவந்ததன் மூலம் இன்னும் அதிகமானோருக்கு அறிமுகமானார்.
42 வயதான மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவருக்கும் முதல் மனைவி ஸ்ருதிக்கும் இடையில் பிரச்னை எழுந்ததாக கூறப்பட்டது. இதற்கிடையில், பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதை ஜாய் கிரிஸில்டாவே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாக போட்டதுதான் ஹைலைட்டே...
இன்ஸ்டாவில் சில நாள்களுக்கு முன் 'Mr & Mrs. Madhampatty Rangaraj' எனும் ஹேஷ்டேக்குகளை சேர்த்து ஜாய் அவர்கள் திருமணம் செய்து மாலையும் கழுத்துமாக நிற்பது போன்ற புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். மேலும், அதில் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டாவுக்கு குங்குமம் வைத்துவிடும் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.
இதோடு நிற்காமல், திருமண அறிவிப்பை வெளியிட்ட ஒரு சில மணிநேரத்திலேயே, தாங்கள் இந்த வருடத்தில் தங்களது குழந்தையை வரவேற்க தயாராக உள்ளதாகவும், தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் ஜாய் கிரிஸில்டா பதிவிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதாவது, முதல் மனைவி உடன் விவாகரத்து செய்யாமல் 2ஆம் திருமணம் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
இருப்பினும் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பிலோ, ஸ்ருதி தரப்பிலோ எவ்வித தகவல்களும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. தற்போது ஜாய் கிரிஸில்டாவை மாதம்பட்டி ரங்கராஜ் அவரது இன்ஸ்டாகிராமிலேயே பின்தொடரவில்லை. அதே நேரத்தில், முதல் மனைவி ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் முகப்பு பக்கத்தில், 'மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி' என இன்னும் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற தனியார் நிகழ்வில் முதல் மனைவி ஸ்ருத்தி (Shruthi) உடன் ரங்காஜ் கலந்துகொண்டார். தற்போது இதுவும் நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருள் ஆகி உள்ளது. அவர்களின் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. தொடர்ந்து, ஜாய் கிரிஸில்டாவின் கதி என்ன ஆனது என பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ