)
Company Announces Holiday For Coolie: Farmers Constructions PTE LTD நிறுவனம் கூலி ரிலீசுக்காக ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அறிவித்துள்ளது. ஊழியர்கள் டிக்கெட் மற்றும் உணவுக்கான செலவுகளும் பெற்றுள்ளனர். இந்தப் புதிய அறிவிப்பு ரசிகர்களிடையே பேசுபொருளாகிறது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது. இதில் தலைவர் ரஜினிகாந்த், நாகார்ஜூனா, ஸ்ருதி ஹாசன், அமீர் கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் வெளியாகும் முன்பே, இந்தியாவிலிருந்து வெளிநாடுகள் வரை, குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில், முன்பதிவு சாதனை அளவில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், சிங்கப்பூரிலுள்ள Farmers Constructions PTE LTD என்ற நிறுவனம், கூலி ரிலீஸ் நாளில் தனது ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அறிவித்துள்ளது. இதோடு, அவர்கள் அனைவருக்கும் திரைப்பட டிக்கெட்டும், உணவுக்கான செலவுக்காசும் வழங்கப்படுகிறது.
ஒவ்வொருவருக்கும் சுமார் 25 சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான டிக்கெட், மேலும் 30 டாலர் உணவு செலவுக்காக - மொத்தம் 55 டாலர் (சுமார் இந்திய மதிப்புக்கு 2000 ரூபாய்) அளிக்கப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள், அந்த நிறுவனத்தின் செயலை பாராட்டி வருகின்றனர்.
சுருக்கமாக:
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ