)
Cooku With Comali Season 6 Elimination Week : ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருக்கிறது, குக் வித் கோமாளி. சமையலையும், நகைச்சுவையையும் ஒறிங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சி, அவ்வப்போது சீரியஸான கட்டத்தை எட்டுவதுண்டு. அப்படி, இந்த வாரமும் எலிமினேஷன் ரவுண்ட் வர இருக்கிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியை 4வது சீசன் வரை நடத்திக்கொண்டிருந்த ப்ரொடக்ஷன் நிறுவனம், 5வது சீசனில் இருந்து விலகியது. இதையடுத்து வெங்கடேஷ் பட்டும் இதிலிருந்து நடுவராக இருக்க மாட்டேன் என்று கூறி விலகினார். ஆனால் இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வந்தது. கடந்த சீசனில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆனார். அதைத்தொடர்ந்து, 6வது சீசனும் புத்தம் புது பொலிவுடன் ஆரம்பமானது.
புது கோமாளிகள், புது குக்குகள், 1 புது நடுவர் என்று நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் கொஞ்சம் மந்தமாக சென்ற இந்த நிகழ்ச்சி பின்னர் சூடுபிடித்தது. தற்போது ராஜு, உமைர், ஷபானா, பிரியா ராமன் உள்ளிட்டோர் மக்களை மகிழ்விக்கும் குக்குகளாக இருக்கின்றனர்.
தற்போது வரை, சுந்தரி, கஞ்சா கருப்பு, சௌந்தர்யா, மதுமிதா, செளந்தர்யா உள்ளிட்டோர் எலிமினேட் ஆகியிருக்கின்றனர். இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்ட் நடக்க இருக்கிறது. இதில் ஃபனலாக உமைர், ராஜு, பிரியா ராமன் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.
ரசிகர்கள் பாேக விரும்பவது யார்..
குக் வித் கோமாளியின் ப்ரமோவில், யார் வெளியேறியது என்பது தெரியவில்லை. ஆனால் ரசிகர்கள் பலர், உமைரும் ராஜுவும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். சனி-ஞாயிறு எபிசோட் வந்தால்தான் யார் வெளியேறுகிறார் என்பது தெரியும்.
முன்னர் போல இல்லையோ?
குக் வித் கோமாளி நிகழ்ச்சி, முன்னர் போல இல்லையோ என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. வேண்டுமென்றே சில லவ் கான்செப்ட்களை உருவாக்குவது, தேவையற்ற காமெடிக்களை தூவுவது போன்றவைகள் நடந்து வருகிறது.
மாதம்பட்டி ரங்கராஜ் பிரச்சனை!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது இரண்டாவது திருமண சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இதுவும் நிகழ்ச்சியின் டிஆர்பியை ஏற்றுவதாக இருக்கிறது. இவரை அவ்வப்போது குரேஷியும் கலாய்த்து வருகிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ