)
Coolie Box Office Collection Day 10 : தமிழ் திரையுலகின் டாப் நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், ரஜினிகாந்த். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்திருந்த கூலி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் ரிலீஸாகி பத்து நாட்கள் கடந்துள்ளதை அடுத்து, இப்படம் இதுவரை செய்த வசூல் விவரம் குறித்து இங்கு பார்ப்போம்.
லோகேஷ் கனகராஜ் உடன், ரஜினிகாந்த் முதன்முறையாக கைக்கோர்த்த படம், கூலி. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்ததால், கண்டிப்பாக இப்படம் நன்றாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான போது கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றது. படம், ரூ.400 கோடி வசூலை கடந்து விட்டதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டது. இப்போது, படம் வெளியாகி 10 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், வசூல் விவரம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் தேடி வருகின்றனர்.
கூலி படம், கடந்த வாரம் வீக் எண்டை குறிவைத்து வெளியானது. இதையடுத்து தற்போது 2 வீக் எண்ட்கள் வந்து விட்டது. 10 நாட்கள் முடிவில் படம், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.291 கோடியை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில், படம் சுமார் ரூ.468 கோடியை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. முதல் வாரத்தில், மடமடவென குவிந்த வசூல், அடுத்த வார வேலை நாட்களில் சற்று குறைந்தது. தற்போது வார இறுதியிலும் இப்படத்தின் வசூல் மந்தமாகவே இருப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.
கூலி திரைப்படத்திற்கு, ஆரம்பத்திலிருந்தே கலவையான விமர்சனங்கள் வெளியாகி வந்தது. காரணம், படத்தில் இருந்த பல்வேறு லாஜிக் ஓட்டைகளை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஸ்ருதிஹாசன், அமீர்கான் பாேன்ற நடிகர்களின் கதாப்பாத்திரங்களை வீணடித்தது, நாகார்ஜுனாவை இன்னும் சரியாக உபயோகித்து கொள்ளாதது, பல இடங்களில் படத்தில் இருந்த தவறுகளை கவனிக்காமல் விட்டது போன்ற விஷயங்கள் இந்த கலவையான விமர்சனங்களுக்கு காரணமாக இருந்தது.
படத்தில் உள்ள ப்ளஸ் ஆக ரஜினியையும் அனிருத்தின் இசையையும் மட்டுமே ரசிகர்கள் பார்க்கின்றனர். ரஜினி, பிற படங்களை போல அல்லாமல், கூலி படத்தில் செம ஸ்டைலாக இருப்பதாகவும், இதில் அவருக்கு வயதான தோற்றமே தெரியவில்லை என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதே போல, அனிருத்தின் இசையும் படத்தை தொய்வுற செய்யாமல் நகர்த்தி செல்கிறது. எனவே, படம் இவர்களால் வெற்றி பெற்றதாக விமர்சகர்களும் தெரிவிக்கின்றனர்.
அடுத்த பிளான் என்ன?
கூலி படம், செளபின் காகிருக்கு பெரிய மார்கெட்டை ஓபன் செய்து கொடுத்துள்ளது. ஏற்கனவே மஞ்சுமெல் பாய்ஸ் படம் மூலம் ஜொலித்த இவர், இப்போது தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார். ரஜினிகாந்த், அடுத்து ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் அருண் மாத்தேஸ்வரன் இயக்கும் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ