)
Coolie Box Office Collection Day 5 : கடந்த சில நாட்களாகவே, இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் ‘கூலி’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம், கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன்முறையாக நடித்திருந்த படம், கூலி. இந்த படத்தில், ரஜினியுடன் சேர்ந்து ஸ்ருதிஹாசன், சத்யராஜ், செளபின் சாகிர், உப்பேந்திரா, அமீர்கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
டிரைலரும் டீசரும் ரசிகர்களை பெரிதாக தூண்டிவிட “கதை இதுவாக இருக்குமோ, அதுவாக இருக்குமோ..” என்று பலர் ஆளாளுக்கு ஒவ்வொரு கதை வளர்க்க ஆரம்பித்து விட்டனர். கடைசியில் படத்தின் கதை யாருமே கணிக்காதது போல இருந்தது.
நெகடிவ் விமர்சனங்கள்:
நம் ஊரில் வெளிவரும் பெரிய ஹீரோக்களின் படங்கள் நெகடிவ் விமர்சனங்களை பெருவதற்கு காரணமாக இருப்பது, அப்படங்களின் மீதுள்ள பெரும் எதிர்பார்ப்புதான். கூலி படத்தின் மீதும் அது இருந்தது. குறிப்பாக, லோகேஷ் கனகராஜை ரஜினி ரசிகர்கள் மலைபோல நம்பியிருந்தனர். ஆனால் படத்தில் இருந்த லாஜிக் ஓட்டைகள் நிறைய இருந்ததாலும், ஸ்கிரிப்டில் நிறைய சொதப்பல்கள் இருந்ததாலும் ரசிகர்கள் இதற்கு நெகடிவ் விமர்சன மழையை பொழிந்து வருகின்றனர்.
கூலி திரைப்படம், ஒரே நாளில் அதிக வசூலை பெற்ற தமிழ் படம் என்கிற சாதனையை படைத்துள்ளது. இது குறித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருந்த பதிவில் படம் ஒரே நாளில் ரூ.151 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக குறிப்பிட்டிருந்தது.
இப்போது வரை வசூல்..
கூலி திரைப்படத்தை விடுமுறை மற்றும் வீக் எண்ட் நாட்களை குறிப்பிட்டு வெளியிட்டனர். இதையடுத்து, இந்த நாட்கள் அனைத்திலும், ஷோக்கள் ஹவுஸ் ஃபுல்லாக இருந்தன. படம் வெளியாகி 5 நாட்கள் ஆகியிருக்கிறது. இதுவரை படம் சுமார் ரூ.300 கோடி வசூலை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. தரவுகளின் படி, நேற்றைய நாள் முடிவில் படம் ரூ.34 கோடி வரை வசூலித்திருந்தது. திங்கட்கிழமையான இன்றும், கூலி படம் ஓடும் தியேட்டர்கள் பல ஹவுஸ் ஃபுல்லாக இருகின்றன. இன்றைய நாள் முடிவில் வசூஉல், ரூ.2 கோடியை எட்டும் என்று கூறப்படுகிறது.
The Reign continues #Coolie#Coolie ruling in theatres worldwide@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @Reba_Monica @monishablessyb @anbariv @girishganges @philoedit @ArtSathees… pic.twitter.com/7MngxXYpZP
— Sun Pictures (@sunpictures) August 18, 2025
நெகடிவ் விமர்சன மழையிலும் இவ்வளவா..?
கூலி திரைப்படம் வெளியான நாளில் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அது மட்டுமன்றி, நெட்டிசன்கள் பலர் இந்த படத்தை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். ஆனால், இதையெல்லாம் கடந்தும் படம் ரூ.300 கோடி வசூலை நெருங்கி வருவதாக கூறப்படுவது, பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியான பிறகுதான் உண்மையான வசூல் நிலவரம் என்ன என்பது தெரியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ