Coolie Movie Cast Salary Details : ரஜினிகாந்த், அமீர் கான், நாகார்ஜுனா, லோகேஷ் கனகராஜ், அனிருத், உபேந்திரா என மெகா கூட்டணியில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் உலகெங்கும் திரையரங்கில் ரிலீசாகும் நிலையில், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கு. இதுகுறித்து பார்க்கலாம்.
ரஜினிகாந்த் 50:
திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது கலைப் பயணத்தில் 50வது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இந்த சிறப்பான தருணத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி திரைப்பட வெளியாகவுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர். மறுபுறம் ரசிகர்கள் கூலி திரைப்படத்தின் ரிலீசை உற்சாகத்துடன் கொண்டாட ரசிகர்கள் தயாராகியும் வருகின்றனர்.
குறிப்பாக கூலி திரைப்படம் வெளியாகும் முதல் நாளிலேயே இதற்கு முன்பு உள்ள சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே 550 கோடி ரூபாய் வசூல் சாதனை நிகழ்த்தியிருக்கிறது. 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்தப் படம் வெளியீட்டிற்கு முன்னதாகவே சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் கிடைத்துள்ளது. இந்த பெருமை அனைத்தும் சூப்பர் ஸ்டாரையே சேரும் என பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், கூலி திரைப்படத்தில், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Rajinikanth Salary | ரஜினிகாந்தின் சம்பளம்:
கூலி திரைப்படத்தில் தேவா என்ற பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்துள்ள ரஜினிகாந்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே பேசப்பட்ட சம்பளம் 150 கோடி ரூபாய் என்ற நிலையில், படத்தின் அமோக வரவேற்பு காரணமாக அவரது சம்பளத்தை உயர்த்திக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரை இந்திய சினிமாவின் அதிக வருமானம் ஈட்டும் நட்சத்திரங்களில் ஒருவராக மாற்றியிருக்கிறது.
Lokesh Kanagaraj Salary | லோகேஷ் கனகராஜ் சம்பளம்:
தொழில் ரீதியாக மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைந்திருக்கிறார். கூலி திரைப்படத்திற்காக 50 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றிருக்கிறார். ரஜினிக்கு அடுத்து அதிக சம்பளம் பெற்ற பிரபலம் இவர்தான் என்று கூறப்படுகிறது.
Aamir Khan Salary | அமீர்கான் சம்பளம்:
கூலி திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நட்சத்திரமான அமீர்கான் கேமியோ ரோலில் டித்திருக்கிறார். தஹா என்ற கொடூரமான கேங்ஸ்டராக நடித்திருக்கும் அவர், 15 நிமிடங்கள் திரையில் தோன்றுகிறார். இதற்காக அவருக்கு வழங்கப்பட்ட சம்பவம் 20 கோடி ரூபாய்.
Anirudh Ravichander Salary | அனிருத்தின் சம்பளம்:
ஜெயிலரைத் தொடர்ந்து ரஜினிகாந்துடன் மீண்டும் இணைந்துள்ள இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு, 15 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

Nagarjuna Salary | நாகார்ஜுனாவின் சம்பளம்:
கூலி படத்தில், கிங் நாகார்ஜுனா சைமன் கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக 10 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
Sathyaraj Salary | சத்யராஜ் சம்பளம்:
ராஜசேகர் என்ற முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகர் சத்யராஜ், 5 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Upendra Salary | உப்பேந்திராவின் சம்பளம்:
கூலி திரைப்படத்தில், கலீஷாவாக நடித்ததற்காக கன்னட நடிகர் உபேந்திராவுக்கு, 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
Shruti Haasan | ஸ்ருதிஹாசன் சம்பளம்:
கூலி படத்தில் ப்ரீத்தி என்ற கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இதற்காக அவர் பெற்றுள்ள சம்பளம் 4 கோடி ரூபாய்.
Pooja Hegde | பூஜா ஹெக்டே:
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள மோனிகா என்ற பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தனது துள்ளல் நடனத்தால் ஆட்டம்போட வைக்கும் பூஜா ஹெக்டே 3 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றிருக்கிறார்.
Soubin Shahir | செளபின் சாஹரின் சம்பளம்:
"மோனிகா" பாடலில், நடனமாடியுள்ள சௌபின் ஷாஹிர், இந்தப் படத்டதில் தயால் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்காக, அவருக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பு: இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் இணையத்தில் உள்ள தகவல்களின்படி எழுதப்பட்டவை. இதை ஜீ நியூஸ் தமிழ் (ZEE MEDIA) உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 10 நிமிடம் நடிக்க இத்தனை கோடி சம்பளமா? கூலி படத்தில் அமீர்கானின் சம்பளம்!
மேலும் படிக்க | கூலி படத்தில் நடனமாடிய பூஜா ஹெக்டே..1 பாட்டுக்கு ஆட இத்தனை கோடி சம்பளமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









