)
Coolie Negative And Positive Aspects : ரஜினி ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் ஆக, கூலி திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் ப்ளஸ், மைனஸ் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதல் முறையாக நடித்திருக்கும் படம், கூலி. இந்த படத்தில் அமீர்கான், உப்பேந்திரா, சத்யராஜ், நாகார்ஜுனா என்று பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தின் ப்ளஸ் என்ன, மைனஸ் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
ரஜினிகாந்த்: ரஜினி நடிக்கும் படங்கள் அவருக்காகத்தான் ஓடும் என்பது அனைவருக்கும் தெரியும். இருந்த போதிலும் அவரை பிற படங்களை விட இந்த படத்தில் இன்னும் செம ஸ்டைலாக காட்டியிருக்கின்றனர்.
இசை: கூலி படத்தின் பல காட்சிகளை பெரிதாக தூக்கி விட்டது, படத்தின் இசைதான். ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்தனியாக பின்னணி இசை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினிக்கும் அமீர்கானுக்கும் போடப்பட்டிருக்கும் பின்னணி இசை ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. இதற்கு அனிருத்திற்கு பாராட்டுகள்.
ஒளிப்பதிவு: படத்தின் ஹீரோ ரஜினிகாந்த்தான் என்றாலும், அவரை ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் மாஸாக காண்பித்துள்ளார். அவரை மட்டுமல்ல, படத்தின் சண்டை காட்சிகளையும் பங்கரமாக காண்பித்திருக்கிறார்.
கூலி படத்தில், சில எதிர்பார்க்காத ட்விஸ்டகளும் இடம் பெற்றிருக்கின்றன. வில்லன் யாரென்று ஒரு பக்கம் நாம் கவனம் செலுத்தும் போது, இறுதியில் அங்கு வேறு ட்விஸ்டை வைத்துள்ளனர். எனவே, கதையில் எதிர்பார்த்த திருப்பங்களே வந்திருந்தாலும், அவை நன்றாக எழுதப்பட்டுள்ளன.
நகைச்சுவை காட்சிகள்:
கூலி திரைப்படத்தில், force செய்து எந்த நகைச்சுவை காட்சியும் வைக்கவில்லை. எதேச்சியாக சில காட்சிகள் எழுதப்பட்டிருக்கின்றன, அவை சிரிக்கும்படி இருக்கின்றன.
ஃப்ளாஷ்பேக்:
கூலி படத்தில், எந்த அளவிற்கு ஃப்ளேஷ் பேக்கை வைக்க வேண்டுமாே, அந்த அளவிற்கு மட்டும் வைத்துள்ளனர். இது, படத்தில் சரியாக பொரு்தியுள்ளது. அதே போல CGI உபயோகித்து, ரஜனிகாந்தின் இளமை தோற்றத்தை கொண்டு வந்திருக்கின்றனர். இது எந்த இடத்திலும் வினோதமாக தெரியவில்லை. படத்திற்கு ஏற்றவாறு சரியாக பொருந்தியுள்ளது.
மைனஸ் என்ன?
கதை சிக்கல்: ஒரு படத்தை பற்றி பேச வேண்டும் என்றால், அந்த படத்தின் கதையை ஒரு வரியில் கூற வேண்டும் இல்லையா? ஆனால், கூலி படக்கதையை அப்படி கூறவே முடியாது. இதில் ஒரு கடத்தல் அதை தடுக்கும் ஹீரோ என்பது கதை கிடையாது. கடத்தல் பல, வில்லன்கள் பல, அவர்களை சுற்றி நடக்கும் டிராமாக்கள்தான் கதையாக இருக்கிறது.
வில்லனை சரியாக உபயோகிக்கவில்லையோ..?
கூலி படத்தில் மெயின் வில்லனாக வந்தது நாகார்ஜுனா. ஆனால், அவரை படத்தில் குறைவாக உபயோகித்திருக்கின்றனரோ என்று பலருக்கு தோன்றியிருக்கிறது. அதே போல, அமீர்கானும் கடைசி 10 நிமிடத்தில் காண்பித்திருக்கின்றனர். அவருக்கும் படத்தில் சரியாக வெயிட் கொடுக்கப்படவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஸ்ருதிஹாசனுக்கு படத்தில் வெயிட் நிறைய இருந்தாலும், அவரை பலவீனமான கதாப்பாத்திரமாக காண்பித்திருக்கின்றனர்.
இது லோகி படமா?
லோகேஷ் கனகராஜின் பிற படங்களான மாநகரம், கைதி, விக்ரம், லியோ உள்ளிட்டவை, படம் ஆரம்பித்த 10 நிமிடங்களுக்குள்ளாகவே ஆடியன்ஸை இருக்கையில் அமர வைத்துவிடும். ஆனால், கூலி படத்தின் முதல் பாதியை அப்படி கவனச்சிதறல் இல்லாமல் பார்க்க முடியவில்லை. எனவே, ரசிகர்களுக்கு இது லோகி படமா என்று டவுட்டே வந்து விட்டது. படத்தின் முதல் பாதி காட்சிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தது போல இருந்ததும், இதற்கு காரணம்.
‘இதை’ தவிர்த்திருந்தால்..
படம் ரஜினி ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டிருக்கிறது என்பது புரிந்துக்கொள்ளப்படும் ஒரு விஷயம்தான். ஆனால், அனைத்து Frameகளிலும் அப்படிப்பட்ட மாஸ் காட்சிகளை வைத்திருக்க வேண்டுமா என்கிற கேள்வி எழுகிறது. இதை தவிர்த்து, நடிகர்களை தவிர்த்துவிட்டு, முதல்பாதி கதையை இன்னும் கொஞ்சம் நன்றாக நகர்த்தியிருந்தால் படம் இன்னுமே பெரிதாக பேசப்பட்டிருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ