)
Coolie OTT Release Date : சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம் கூலி. இந்த படத்தில் செளபின் சாகிர், நாகார்ஜுனா, அமீர்கான், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்புகளோடு படம் வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே வந்துள்ளது.
கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். இதில் ரஜினிகாந்த் தேவா எனும் கேரக்டரில் நடித்துள்ளார். ஒரு கடத்தல் கும்பலையும், அவனிடம் சிக்கியிருக்கும் நண்பனின் மகளை, தேவா காப்பாற்றும் படியும் கதை நகர்கிறது. படத்தை ரசிகர்கள் எதற்காக தியேட்டரில் போய் பார்க்கிறார்களாே இல்லையோ, ஸ்டைலான ரஜினியை பார்ப்பதற்காக போகின்றனர். படத்தின் இசை, பாடல்கள் மற்றும் பஞ்ச் வசனங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஓடிடி தளங்களின் வருகை பெருகி விட்டதை தொடர்ந்து, அப்படங்கள் தியேட்டரில் வெளியான சில நாட்களிலேயே ஓடிடியில் வெளியாவதும் வாடிக்கையாகி வருகிறது. படத்தின் டைட்டில் கார்ட் போடும் வேலையிலேயே, டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் பார்ட்னர் யார் என்பதையும் போட்டு விடுகின்றனர். கூலி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலும் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் வாங்கியுள்ளது.
எதில், எப்போது பார்க்கலாம்?
கூலி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தேதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ஆனால், திரை வட்டாரங்களில் இது குறித்து என்ன பேசுகின்றனர் என்பது தெரிந்திருக்கிறது.படம், வரும் செப்டம்பர் மாதம் 12 அல்லது 13ஆம் தேதியில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இதற்கான Official Announcement-ற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
படத்தில் இருந்த ஓட்டைகள் என்ன?
கூலி படத்தை என்ஜாய் செய்து பார்க்க பல விஷயங்கள் இருந்தாலும், அதில் இருக்கும் கவனிக்கப்படாத லாஜிக்கல் ஓட்டைகளை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். உதாரணத்திற்கு, வில்லனின் மனைவியை வீடியோ காலில் பார்த்தும் ஸ்ருதிஹாசன் அவர் அழைத்தவுடன் செல்வது, தன் தந்தையை கொன்றவனின் முகத்தை, சைமன் மறந்து இருப்பது போன்றவை.
மாஸ் ஹீரோக்களின் படங்களில் லாஜிக் பார்க்கக்கூடாது என்றாலும், “ஒரு நியாயம் வேணாமா பாஸ்?” என்று கேட்கின்றனர் ரசிகர்கள். இருப்பினும், அனிருத்தின் இசை படம் தொய்வுரும் வேலைகளில் எல்லாம் தூக்கி நிறுத்துகிறது. ஆனால், அதை மட்டுமே நம்பி லோகி அடுத்தமுறை படம் எடுக்க வேண்டாம் என்பது ரசிகர்களின் ஒரே வேண்டுகோளாக இருக்கிறது.
வசூல் எவ்வளவு?
கூலி படம் வெளியாகி 8 நாட்களை கடந்து விட்டது. இந்த நிலையில் படம் சுமார் ரூ.410 கோடி வசூலை கடந்திருப்பதாக கூறப்படுகிறது. படம் இந்தியாவில் மட்டுமன்றி உலக நாடுகளில் மார்கெட்டை பிடித்திருப்பதால் அங்கும் நல்ல கலக்ஷன் வந்துள்ளது. தமிழில் முதல் 1000 கோடியை இந்த படம் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் தற்போது தவிடுபொடி ஆகி இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ